Title of the document

கம்மாபுரம் வட்டார பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கம்மாபுரம் வட்டார கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கினார். கூடுதல் வட்டார கல்வி அலுவலர் சந்திரலேகா முன்னிலை வகித்தார். ஒன்றிய பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு மூலம் வட்டாரத்திலுள்ள 108 பள்ளிகளில் பயிலும் ஒரு மாணவருக்கு ஒரு மரம் திட்டம் செயல்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும், இத்திட்டத்தின் மூலம், பள்ளி வளாகம், பொது இடங்களில் ஒரு மாணவர், ஒரு மரத்தை நட வேண்டும். தொடர்ந்து அதை பராமரித்து வர வேண்டும். நன்றாக வளர்ப்போருக்கு பாராட்டும், மரம் வளர்ப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டினால், திட்டம் சிறப்பாக செயல்படுத்த முடியுமென தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post