துப்புரவு பணி: களத்தில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள்
nss students tamilnadu
 மடத்துக்குளம் பகுதியில் உள்ள பள்ளிகளில், நாட்டு நலப்பணிதிட்ட முகாம் நடக்கிறது.நாட்டுநலப்பணித்திட்ட பொன்விழா ஆண்டை முன்னிட்டு, மடத்துக்குளம் பகுதியிலுள்ள பள்ளிகளில் முகாம் நடக்கிறது. கடந்த 23ம் தேதி தொடங்கி ஏழுநாட்கள் நடக்கும், இந்த முகாமில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நேற்றுமுன்தினம், உடுமலை கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் துங்காவி பள்ளி வளாகத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். நேற்று, மருத்துவ முகாம் நடந்தது.கொமரலிங்கம் அரசு மேல்நிலைபள்ளியிலும் இந்த முகாம் நடக்கிறது. மாணவர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்கள் வழிகாட்டுகின்றனர். வரும் 29ம் தேதி முகாம் நிறை வடைகிறது.

0 Comments:

Post a Comment