எம்.பி.ஏ., படிக்க நுழைவுத் தேர்வு மதிப்பெண் கட்டாயம் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படிக்க, இந்திய மேலாண்மை நிறுவனத்தின் நுழைவு தேர்வு மதிப்பெண்கள் அவசியம் என, துணைவேந்தர் குர்மீத் சிங் தெரிவித்தார்.

இது குறித்து நேற்று அவர் கூறியதாவது:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., மேலாண்மை படிப்பு மற்றும் பான்னாட்டு வணிகவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்கள், இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.,) சார்பில் நடத்தப்படும். பொது நுழைவு தேர்வை எழுதி, அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தியாவில் 147 தேர்வு மையங்களில் வரும் நவ., 25ம் தேதி இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக, கடந்த ஆக., 8ம் தேதி நுழைவு தேர்விற்கான பதிவு இணைய தளத்தில் தொடங்கி விட்டது. வரும் 26ம் தேதி வரை பதிவு ஏற்கப்படும். இது தொடர்பாக மேலும் விவரங்களை, கேட் -2028 என்ற இணையதளம் வழியாக பெறலாம். மாணவர்கள் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரங்கள், 2019 ஜனரியில் வெளியிடப்படும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவு தேர்வு மதிப்பெண்கள் அடங்கிய விவரங்களோடு, புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கான எம்.பி.ஏ., மேலாண்மை மற்றும் எம்.பி.ஏ., பன்னாட்டு வணிகவியல் படிப்புகளில் 2019-20ம் கல்வி ஆண்டில் சேர விண்ணப்பிக்கலாம்.

அதற்கான பணிகள் ஜனவரி 2019ல் தொடங்கும். பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் (கேட்-2018) தரவரிசை விண்ணப்பிக்கின்ற மாணவர்கள் வரும் 2019 மார்ச் மாதம் நடைபெற உள்ள மாணவர் சேர்க்கைக்கு அழைக்கப்படுவர். எம்.பி.ஏ., மேலாண்மை மற்றும் எம்.பி.ஏ., பன்னாட்டு வணிகவியல் படிக்க விரும்பும் மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் (www.pondiuni.edu.in) இணைய தள முகவரியில் கூடுதல் விரங்களை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது, மேலாண்மை துறை புல முதன்மையர் ஆஞ்சநேய சுவாமி, மேலாண்மை துறை தலைவர் சித்ரா, பன்னாட்டு வணிகவியல் துறை தலைவர் பூஷன் சுதாகர், துணை பதிவாளர் முரளிதரன், மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

5 சதவீத ஒதுக்கீட்டிற்கு வாய்ப்பில்லை :

துணைவேந்தர் குர்மீத் சிங் கூறுகையில், &'&'புதுச்சேரி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது உள்ளூர் மாணவர்களுக்கு 25 இடஒதுக்கீடு தரப்பட்டது. அதன் பிறகு தொடங்கிய பாடப்பிரிவுகளுக்கும் 25 சதவீதம் தர கோரியிருந்தனர். சட்டவிதிகள் படியோ, அரசு ஒப்பந்தத்திலோ அதுபோன்ற உடன்பாடு இல்லாததால், தர வேண்டிய அத்தியாவசியம் இல்லை. வழக்கமாக இட ஒதுக்கீடு வழங்கப்படும் பாடப்பிரிவுகளுக்கு தொடர்ந்து வழக்கப்படும். இதர பிரிவுகளில் இடஒதுக்கீடு தர சாத்தியக்கூறு இல்லை.

பல்கலைக்கழகத்தில், அரபிந்தோ பெயரில் இருக்கை, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க உள்ளோம். கருணாநிதிக்கு இருக்கை தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்திற்கான புதிய பிரிவு துவங்கப்பட உள்ளது. இம்மூன்றும் இந்த கல்வி ஆண்டு துவங்கப்படும். புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் ேசர்ந்து மொத்தம் 125 கிராமங்களை தத்தெடுத்து பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர்.

0 Comments:

Post a Comment