வன உயிரின வார விழா மாணவர்களுக்கு போட்டி

வன உயிரின வார விழா
வனத்துறை சார்பில், வன உயிரின வார விழாவையொட்டி, உடுமலை ஆர்.ஜி.எம்., பள்ளியில், மாணவர்களுக்கு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு கல்வியாண்டிலும், அக்., முதல் வாரத்தில், வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது. வனம் மற்றும் அதிலுள்ள உயிரினங்களை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் இவ்வாரத்தில் மேற்கொள்ளப்படும்.

இதையொட்டி, உடுமலை ஆர்.ஜி.எம்., பள்ளியில், ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் சார்பில், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

ஓவியம் வரைதல், பேச்சு, கட்டுரைப்போட்டி, வினாடி-வினா உட்பட போட்டிகள், வன உயிரின பாதுகாப்பை மையமாக கொண்டு நடத்தப்பட்டது.

இதில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவைச்சேர்ந்த, 175 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வனச்சரக அலுவலர்கள் தனபாலன், முருகேசன் போட்டிகளை கண்காணித்து ஒருங்கிணைத்தனர்.

0 Comments:

Post a Comment