
தஞ்சாவூர் பேராவூரணியிலுள்ளது அரசு நடுநிலைப்பள்ளி. அந்தப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக, இந்தப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயமும், ஆயிரம் ரூபாய் பணம் அளிக்கப்படும் என்று கிராம மக்கள் அறிவித்தனர். அதன்படி, பள்ளியில் சேர்ந்த 28 மாணவர்களுக்கு தங்க நாணயமும் பணமும் அளிக்கப்பட்டது.
அரசுப்பள்ளியில் சேர்ந்தால் பிள்ளைகள் கெட்டுப்போய் விடுவார்கள். சேர்க்கை சரி இருக்காது. படிக்க மாட்டார்கள் என்று நினைக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை இன்று குறைந்து வருகிறது. தனியார் பள்ளிகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நன்கு படிக்கக்கூடிய பிள்ளைகள் அரசுப்பள்ளிகளில் உருவாகிவிட்டனர். திறமையான ஆசிரியர்கள் உருவாகிவிட்டனர். கல்வியை வியாபார கேந்திரமாக மாற்றியமைத்த தனியார் பள்ளிகளை விட, தரமான கல்வி தளமாக அரசுப்பள்ளிகளை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.