கால்நடை மருத்துவப் படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கால்நடை மருத்துவப் படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் உணவுத்தொழில்நுட்பம், 
கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழிநுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகளும் உள்ளன.10,000 பேர் விண்ணப்பம்: இந்தப் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மே 21 -ஆம் தேதி தொடங்கின. கால்நடை மருத்துவப் படிப்புக்கு8,639 விண்ணப்பங்கள், பி.டெக் படிப்புகளுக்கு 1,734 விண்ணப்பங்கள் என இதுவரை மொத்தம் 10,373 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கால்நடை பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ளன.இந்தப் படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஜூன் 6 -ஆம் தேதி கடைசி என்றும், பதிவு செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப ஜூன் 11 -ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கால அவகாசம்: இந்நிலையில், இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஜூன் 11 -ஆம் தேதி வரையும், விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டிய கடைசித் தேதி ஜூன் 18-ஆகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அயல்நாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்தோர் ஆகியோர் சனிக்கிழமை முதல் (ஜூன் 2) ஜூலை 6 -ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.பதிவு செய்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கு ஜூலை 20 -ஆம் தேதி கடைசியாகும். விண்ணப்பங்களை www.tanuvas.ac.in - இல் பதிவு செய்யலாம்

0 Comments:

Post a Comment