Title of the document

பார்வையற்றவர்கள் கல்வி, வேலை வாய்ப்பை தெரிந்துகொள்ள இந்தியாவில் முதல்முறையாக பிரெய்லி வழிகாட்டி புத்தகம் வெளியீடு

பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறையில் உயர்கல்வி படிப்புகள், கல்வி உதவி தொகைகள் மற்றும் வேலை வாய்ப்பை பற்றி தெரிந்துகொள்வதற்கான கல்வி வழிகாட்டி புத்தகத்தை பேராசிரியர் ஒருவர் தயாரித்துள்ளார்.

பார்வையற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பான பிரெய்லி புத்தகத்தை சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் முகம்மது ரபிக் நேற்று வெளியிட்டார்.

அதை சென்னை ஐஐடியை சேர்ந்த பார்வையற்ற மாணவர் முஜீப் ரஹ்மான் பெற்றுகொண்டார். பின்னர், பேராசிரியர் முகம்மது ரபிக் நிருபர்களுக்கு அளித்தபேட்டி:

கடந்த 2011ம் ஆண்டு முதல் உயர்கல்வி படிப்புகள், கல்வி உதவி தொகைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி 10 மற்றும் 12ம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை கொடுத்து வருகிறேன்.

இதுவரையில் 8 லட்சம் மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் குறித்த பயிற்சியை அளித்துள்ளேன்.

இதேபோல், வெளிநாடுகளுக்கு சென்றும் மாணவர்களுக்கு ஆலோசனை கொடுத்துள்ளேன். இதேபோல், வாட்ஸ் அப் மூலமாகவும் வழிகாட்டுதல்களைஅளித்து வருகிறேன்.

கண்பார்வையற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கண்பார்வையற்ற மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி முறையில் கல்வி வழிகாட்டி புத்தகத்தை 2 பாகங்களாக தயாரித்துள்ளேன்.

இது தான் இந்தியாவின் முதல் பிரெய்லி முறையிலான முதல் கல்வி வழிகாட்டி புத்தகம்.  ஒரு புத்தகத்தை தயார் செய்ய ரூ.450 வரையில் செலவு ஆகிறது.

தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசே இந்த புத்தகத்தை தன்னுடைய சொந்த செலவில் தயார் செய்து தர வேண்டும். இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இவ்வாறு கூறினார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post