Title of the document

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இனி பள்ளிக்கு தாமதமாக வரக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சமீப காலமாகவே தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை புதுப் புது திட்டங்களை அறிவித்துவருகிறது. அந்தத் திட்டங்கள்அனைத்தும் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் +2 பொதுத் தேர்வுகள் நடைபெறும்போதே அதற்கான தேர்வு முடிவை வெளியிடும் நாளையும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இதுவரை எந்த ஆண்டும் இது மாதிரியாக நடந்தே இல்லை. இதுவே முதல் முறை. இது போன்ற செயல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை தமிழக்தில் உள்ள அரசு உதவி பெரும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் எப்படி பள்ளிகளை நிர்வகிக்க வேண்டும் என 24 பக்க கையேட்டை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக பள்ளியில் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்த கொள்ளவேண்டும் என்பது பற்றி அவர்களுக்கான கட்டுப்பாடுகள் அதிக அளவில் வகுத்துள்ளனர்.
1. ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது.
2. ஆசிரியர்கள் 10 நிமிடம் தாமதமாக பணிக்கு வந்தால், வழங்கப்படும் ‘கிரேஸ்டைம்’ இனிமேல் வழங்கப்பட மாட்டாது.
3. ஆசிரியைகள் வெள்ளிக்கிழமைகளில் 1 மணி நேரம் கால தாமதமாக வர இனிமேல் அனுமதியில்லை.
4. தற்செயல் விடுப்பு ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.
5. அரைநாள் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் பிற்பகல் பள்ளிதுவங்கும்போது பணிக்கு வந்திருக்க வேண்டும்.
6. பிற பணியாளர்கள் மதியம் 2 மணிக்குப் பணிக்கு வர வேண்டும்.
7. அரசு விடுமுறை, தற்செயல் விடுப்பு என இரண்டும் சேர்த்து 10 நாட்களுக்கு மேல் எடுக்கக் கூடாது.
8. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு,அரை சம்பள விடுப்பு, மருத்துவ விடுப்புஆகியவற்றுடன் இணைக்கக்கூடாது.
9. அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு பணிக்காக அலுவலரைப் பணிக்கு அழைக்கலாம்.10. விடுமுறை தினங்களில் பணியாற்றுபவர்கள் பணியாற்றிய தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் விடுமுறையை எடுக்கத் தலைமை அலுவலரிடம்விண்ணப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தக் கையேட்டில், பொதுப்பணி நிர்வாகம், பணிப்பதிவேடு பராமரிப்பு, பணி வரன்முறை, தகுதிக்கான பருவம் முடித்தல், பணி நிரந்தரம், பதவி உயர்வு,ஊதிய உயர்வு, அலுவலக நடைமுறை, 17(ஏ), 17(பி) சட்டப்பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, நீதிமன்ற நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post