Title of the document

கல்வி தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேறு பள்ளிக்கு மாற்ற சான்றிதழ்

2016-17-ம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.

ஒரு சில மாவட்டங்களில் சில பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய (பெயிலாகும் நிலையில் உள்ள) மாணவ- மாணவியர்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழை பெற்று வேறு பள்ளிக்கு செல்ல வற்புறுத்துவதாக புகார்கள் இவ்வியக்கத்தில் பெறப்பட்டு வருகின்றன.

நடவடிக்கை

எனவே இக்கல்வி ஆண்டு (2016-17) வருகை பதிவேட்டில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளின் பெயர் கட்டாயம் அரசு தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பும் பட்டியலில் இடம் பெற வேண்டும் எனவும், எவர் பெயரேனும் விடுபட்டால் பொறுப்பான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சுற்றறிக்கையின் நகலினை தமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அளித்து உரிய ஒப்புதலை பெற்று தமது அலுவலக கோப்பில் வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு ச.கண்ணப்பன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post