Title of the document


கரூர் வைஸ்யா பேங்கில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் அதிகாரிகள் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:
கிளார்க்குகள்.
கல்வித்தகுதி:


60% அல்லது அதற்கு மேலான மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம். 3ம் ஆண்டு படித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் எந்த அரியர்ஸ் இல்லாமல் 60% மதிப்பெண் தேர்ச்சியுடன் 5வது செமஸ்டர் வரை பாஸ் செய்திருக்க வேண்டும். அஞ்சல்வழியில் பட்டம் பெற்றவர்கள் அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது. வயது:


1.1.2017 அன்று குறைந்தபட்சம் 19 வயதிலிருந்து 26க்குள். முதுநிலை பட்டதாரிகள் 28க்குள் இருக்க வேண்டும். (அதாவது முதுநிலை பட்டதாரி விண்ணப்பதாரர்கள் 2.1.1989க்கு முன்னரோ, பட்டதாரி விண்ணப்பதாரர்கள் 2.1.1991க்கு முன்னரோ, 1.1.1998க்கு பின்னரோ பிறந்திருக்கக் கூடாது). விண்ணப்ப கட்டணம்:


ரூ.500. அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டணத்தை செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு எந்த சலுகையும் கிடையாது. கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். வேறு எந்த வகையிலும் கட்டணத்தை செலுத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Reasoning, English Language, Quantitative Aptitude, General Awareness (With special reference To Banking), Computer Knowledge ஆகிய பிரிவுகளில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். தவறான விடைகளுக்கு 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

ஆன்லைன் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில் ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படுவர்கள் 6 மாதங்கள் தகுதிகாண் பருவத்திற்கு பின்னர் ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் சம்பளத்தில் கிளார்க்குகளாக பணியில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் www.kvb.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:
21.11.2016.
பணி:
மேனேஜர்கள்
1. General Manager (Treasury) (Scale VII):
வயது:


58க்குள். தகுதி:


இளநிலை பட்டம் பெற்று JAIIB/CAIIB முடித்து 5 வருட பணி அனுபவம். 2. Deputy General Manager (Scale VI):
வயது:


55க்குள். தகுதி:


இளநிலை பட்டம் பெற்று JAIIB/CAIIB முடித்து 2 வருட பணி அனுபவம். 3. Assistant General Manager (Scale V):
வயது:


50க்குள். தகுதி:


இளநிலை பட்டம் பெற்று JAIIB/CAIIB முடித்து 2 வருட பணி அனுபவம். 4. Chief Manager (Scale IV):
வயது:


45க்குள். தகுதி:


இளநிலை பட்டம் பெற்று JAIIB/CAIIB முடித்து 2 வருட பணி அனுபவம். 5. Senior Manager (Scale III):
வயது:


45க்குள். தகுதி:


சிஏ/முதுநிலை/இளநிலை பட்டம் பெற்று CAIIB முடித்து 3 வருட பணி அனுபவம்.

5 பணிகளுக்குமான சம்பளம் ஐபிஏ விதிமுறைகளின்படி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் www.kvb.co.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து carrers@kvbmail.com என்ற இ.மெயிலில் அனுப்ப வேண்டும். தபாலில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager,
Karau Vysya Bank Ltd.,
Central Office-HRD,
Erode Road,
KARUR- 639002.
Tamilnadu.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்:
19.11.2016.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post