Title of the document


கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் சென்னை கார்ப்பரேட் அலுவலகத்தில் கிளரிக்கல் மற்றும் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1. Junior Assistant Grade III Trainee:


4 இடங்கள் (பிற்பட்டோர் - 2, மிகவும் பிற்பட்டோர் - 1, எஸ்சி அருந்ததியர் - 1). தகுதி:


60% தேர்ச்சியுடன் முழுநேர எம்.காம்., மற்றும் கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது:


1.11.2016 அன்று பொதுப்பிரிவினருக்கு 25க்குள். பிற்பட்டோர்/ மிகவும் பிற்பட்டோருக்கு 27க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 30க்குள். 2. Junior Steno Typist Grade III Trainee:


1 இடம் (பிற்பட்டோர்). தகுதி:


இன்ஜினியரிங் அல்லாத ஏதேனும் ஒரு பட்டத்துடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் டைப் செய்யக் கூடிய வகையில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருப்பதோடு ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் கீழ்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் டிப்ளமோ படித்தவர்களுக்கும், தமிழ் டைப் படித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். வயது:


1.11.2016 அன்று 27க்குள். மேற்கண்ட 2 பணிகளுக்கும் 2 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். சம்பளம்:


பயிற்சியின் போது முதலாம் ஆண்டில் ரூ.9,759ம், இரண்டாம் ஆண்டில் ரூ.11,250ம் வழங்கப்படும். 2 ஆண்டுகள் பயிற்சிக்கு பின்னர் அவர்கள் ரூ7734 - 91 - 8189 - 99 - 8684 - 108 - 9224 என்ற விகிதத்தில் பணியமர்த்தப்படுவர். 3. Deputy General Manager (Marketing)


1 இடம். (பொது) தகுதி:


60% மதிப்பெண் தேர்ச்சியுடன் மார்க்கெட்டிங் பாடத்தில் எம்பிஏவுடன் முதல் தர தேர்ச்சியில் ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ. அல்லது மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் இடத்தில் 60% தேர்ச்சியுடன் முதுநிலை டிப்ளமோ அல்லது 60% மதிப்பெண் தேர்ச்சியுடன் கலை/ அறிவியல்/ வணிகவியல் பாடங்களில் ஏதேனும் ஒரு பட்டத்துடன் மார்க்கெட்டிங் பாடத்தில் முதல் தர தேர்ச்சியில் எம்பிஏ அல்லது மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ அல்லது மார்க்கெட்டிங் பாடத்தில் 60% தேர்ச்சியுடன் முழுநேர எம்பிஏ. வயது:


1.11.2016 அன்று குறைந்த பட்சம் 46க்குள். சம்பளம்:


ரூ.44,000 - 1400 - 55,200. 4. Senior Manager (Marketing)/Manager (Marketing):


2 இடங்கள் (பொது - 1, பிசி - 1). தகுதி:


60% மதிப்பெண் தேர்ச்சியுடன் மார்க்கெட்டிங் பாடத்தில் எம்பிஏவுடன் முதல் தர தேர்ச்சியில் ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ. அல்லது மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் இடத்தில் 60% தேர்ச்சியுடன் முதுநிலை டிப்ளமோ அல்லது 60% மதிப்பெண் தேர்ச்சியுடன் கலை/அறிவியல்/வணிகவியல் பாடங்களில் ஏதேனும் ஒரு பட்டத்துடன் மார்க்கெட்டிங் பாடத்தில் முதல் தர தேர்ச்சியில் எம்பிஏ அல்லது மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ அல்லது மார்க்கெட்டிங் பாடத்தில் 60% தேர்ச்சியுடன் முழுநேர எம்பிஏ. சம்பளம்:


ரூ.30,500-1000-40,500. வயது:


சீனியர் மேனேஜர் பணிக்கு 1.11.2016 அன்று குறைந்தபட்சம் 39க்குள். மேனேஜர் பணிக்கு 1.11.2016 அன்று குறைந்தபட்சம் 37க்குள். முன்அனுபவம்:


சீனியர் மேனேஜர் பணிக்கு மார்க்கெட்டிங் பிரிவில் 19 ஆண்டுகளும், மேனேஜர் பணிக்கு 17 ஆண்டுகளும் இருக்க வேண்டும். 5. Deputy Manager/ Assistant Manager (Finance):


1 இடம் (பொது) தகுதி:


சி.ஏ., அல்லது ஐசிடபிள்யூஏ படித்திருக்க வேண்டும். வயது:


Deputy Manager பணிக்கு 1.11.2016 அன்று குறைந்தபட்சம் 34க்குள்ளும், Assistant Manager பணிக்கு 1.11.2016 அன்று 29க்குள்ளும் இருக்க வேண்டும். முன்அனுபவம்:


Deputy Manager பணிக்கு குறைந்த பட்சம் 14 ஆண்டுகளும், Assistant Manager (Finance) பணிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும். சம்பளம்:


ரூ.23,500 - 600 - 29,500. 6. Officer (Secretarial):


1 இடம் (பொது) தகுதி:


ஏதேனும் ஒரு பட்டத்துடன் அசோசியேட் ஆப் கம்பெனி செக்ரட்டரீஸ் படித்திருக்க வேண்டும். வயது:


1.11.2016 அன்று குறைந்தபட்சம் 28க்குள். சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்:


ரூ.16,000 - 400 - 20,000.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager (Corporate Technical Cell),
Tamilnadu Newsprint and Papers Limited,
67, Mount Road, GUINDY,
CHENNAI- 600032.
Tamilnadu.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
18.11.2016.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post