நீட் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தம் – உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!
இந்த ஆண்டு (2025) மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் (NEET) தேர்வு தொடர்பாக ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம், மற்றும் அதேபோல் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளன.
தடை உத்தரவு வந்ததற்கான காரணம் என்ன?
சென்னை அருகேயுள்ள ஆவடி பகுதியில் அமைந்துள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வுநாளன்று கனமழையால் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக மாணவர்கள் குறைந்த வெளிச்சத்தில், அசௌகரியமான சூழலில், தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட 13 மாணவர்கள், “முழு திறனுடன் தேர்வெழுத முடியவில்லை” என கூறி, மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை
இந்த வழக்கு மே 17 அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு இந்த விவகாரத்தில் பதிலளிக்க நேரம் கோரியது. இதனை ஏற்று உயர்நீதிமன்றம்:
மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை (NTA), மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு (NMC) நாட்டுமுழுவதும் பதிலளிக்க உத்தரவு செய்துள்ளது.
அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.
வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 2-ஆம் தேதி என அறிவித்துள்ளது.
முடிவுகள் எப்போது?
22.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். ஜூன் 14 அன்று முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நீதிமன்ற உத்தரவால் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
Post a Comment