Title of the document

Local Holiday - மார்ச் 18ஆம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தருமபுரி மாவட்டம் - அரூர் வருவாய் கோட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை :

விடுமுறை - உள்ளூர் விடுமுறை தருமபுரி மாவட்டம் - அரூர் கோட்டம் - அரூர் வட்டம் - தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டத் திருவிழா 18.03.2025-ம் தேதி நடைபெறுதல் - அரூர் வருவாய் கோட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்தல் - தொடர்பாக.

பார்வை-1ல் காணும் அரசாணையில், மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர்த் திருவிழாக்களுக்கு / சிறப்பு நிகழ்வுகளுக்கு அரசால் நாளது வரை அனுமதிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை நாட்கள் அனைத்தையும் உள்ளடக்கிய திருத்திய உள்ளூர் விடுமுறைப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரூர் வட்டத்தில் தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டத் திருவிழாவையொட்டி, 18.03.2025-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அரூர் வருவாய் கோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 29.03.2025 (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச் சட்டம், 1881 (under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று, அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட சார்நிலைக் கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.


Local Holiday | உள்ளூர் விடுமுறை நாட்கள் 2025 - CLICK HERE



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post