CPS Missing Credit - Online Portal-லில் பதிவேற்றம் செய்ய கோருதல் - Treasury Letter
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்-விடுபட்ட தொகைகளை- cps missing credit -online portal-ல் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதை- பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து -cps missing credit - online portal-லில் பதிவேற்றம் செய்ய- கோருதல்-தொடர்பாக
பார்வை 1இல் காணும் குறிப்பாணையில், திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலகில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களின் கீழ் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு cps missing credit -onine portal-லில் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ள தகவலை தெரிவித்தும் மேலும் cps missing credit -online portal-லில் விரைவாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பார்வை 2-இல் காணும் மின்னஞ்சலில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த தொகை விடுபட்டுள்ளதை cps missing credit -online portalலில் விரைந்து பதிவேற்றம் செய்யமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் வாரியாக cps missing credit விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, திருவண்னாமலை மாவட்ட கருவூல அலகில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களின் கீழ் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து cps missing credit -online portal-லில் விரைவாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்துமாறு அனைத்து உதவி கருவூல அலுவலர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment