Title of the document

Local Holiday - மார்ச் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


ஓசூர், சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் தேரோட்டம் நடைப்பெறும் மார்ச் 14ம் தேதி ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி ஆகிய 4 வட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்

இதனை ஈடுகட்டும் வகையில் 22.03.2025 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.*

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நாளான 14.03.2025-ம் தேதியன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள்( சார் ஆட்சியர் அலுவலகம், ஓசூர் உட்பட) மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு (அரசுப் பொதுத் தேர்வை தவிர்த்து) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நாளான 14.03.2025- தேதியன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள்( சார் ஆட்சியர் அலுவலகம், ஓசூர் உட்பட) மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு (அரசுப் பொதுத் தேர்வை தவிர்த்து) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடுகட்டும் வகையில் 22.03.2025 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள், செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



Local Holiday | உள்ளூர் விடுமுறை நாட்கள் 2025 - CLICK HERE


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post