இன்று (22.02.2025) சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO Proceedings
1. திருப்பூர் மாவட்டத்தில் 22.02.2025 சனிக்கிழமை பள்ளி வேலை நாள் :
பார்வையில் காண் முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுரையின்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 22.02.2025 (சனிக்கிழமை) முழு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
2. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22.02.2025 சனிக்கிழமை பள்ளி வேலை நாள் :
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பின்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துவகை பள்ளிகளுக்கும் 26.11.2024 விடுமுறை அளிக்கப்பட்டது . அவ்விடுமுறையை ஈடு செய்யும் விதமாக இன்று சனிக்கிழமை 22.02.2025 அனைத்துவகை பள்ளிகளுக்கும் முழு வேலைநாளாக அறிவித்து பள்ளிகள் செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
- CEO நாகப்பட்டினம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment