Title of the document

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 3) online மூலம் உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு!




சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும் , அரசியல் , சமூக , பொருளாதார , பண்பாட்டுத் தளத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம்.

முழுமையாகவும் , சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்தப் பாகுபாடும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதி நட்புணர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post