Title of the document

ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு என்பது இரண்டு வகைப்படும் - TNHHSSGTA

 *அன்புடையீர் வணக்கம்🙏*

*பணிப் பாதுகாப்பு என்பது இரண்டு வகைப்படும்*

**************************************

1) இதில் முதல் வகை என்பது பணிநியமனம்; முறையான ஊதிய விகிதம் வழங்குதல், ஆண்டு தோறும் இன்கிரிமெண்ட் வழங்குதல்; பதவி உயர்வு வழங்குதல்; தேர்வுநிலை , சிறப்பு நிலை வழங்குதல்; விடுப்பு எடுத்துக் கொள்ளும் உரிமை வழங்குதல்; தவறுகள் செய்தால் அதற்கான விளக்கம் கேட்காமல்; விசாரணை நடத்தாமல் தண்டனை வழங்குதல் கூடாது; அப்படி தண்டனை வழங்கினால் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் உரிமை வழங்குதல் இந்த பணிப் பாதுகாப்பு எல்லாம் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள பணிப் பாதுகாப்பு ஆகும்.இது Internal பணிப் பாதுகாப்பு ஆகும்.இதில் இப்போது நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

2) மற்றொரு முக்கிய பாதுகாப்பு என்பது பள்ளிக்கு வெளியே இருந்து வரும் தாக்குதல்களில் இருந்து ஆசிரியர்களை பாதுகாக்க தற்போது எந்த சட்டமும் இல்லை.மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் மேற்கொள்ளும் நற் பணிகளை தவறாக புரிந்து கொள்ளும் பள்ளிக்கு வெளியே  இருப்பவர்கள் பள்ளிக்குள் புகுவது; ஆசிரியர்களை சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது; ஆசிரியர்களை தாக்குவது; இன்னல்களை இழைப்பது-அடித்து கொலை செய்வது.    --வெளியில் இருந்து வரும் இத்தகைய  கொடுஞ்செயல்களில் இருந்து ஆசிரியர்களைப் பாதுகாக்க எந்த சட்டமும் தற்போது  இல்லை.கண்டவனெல்லாம் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர்களை மிரட்டுவது;அதிகாரம் செலுத்துவது; தாதாக்களை அழைத்து வந்து ஆசிரியர்களை அடித்து நொறுக்குவது ஆகிய இத்தகைய கொடுமைகளில் இருந்து ஆசிரியர்களை பாதுகாக்க தற்போது எந்த சட்டமும் தற்போது இல்லை. பள்ளிக்கு வெளியே இருந்து வரும் இத்தகைய கொடுமைகளில்  இருந்து ஆசிரியர்களை  பாதுகாத்து மாணவச்செல்வங்களின் நல்வளர்ச்சியை  உறுதி செய்திடத்தான் நாம் இப்போது இந்த  வகையான பணிப் பாதுகாப்பிற்கு  சட்டமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றி ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாதுகாத்திட வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்துகிறோம்


இவண் 

*அ.மாயவன்;*

 நிறுவனத் தலைவர் 

 *TNHHSSGTA*.🌹🌺🌹🌺🌷🌹🌺🌷🌹🌺🌷🌹🌺🌷🌹🌺🌷🌹

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post