உள்ளூர் விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு - அனைத்து வகை பள்ளிகளுக்கும் 30.03.2024 சனிக்கிழமை பள்ளி வேலைநாளாகும் - செயல்முறைகள் !!
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
பொருள்: உள்ளூர் விடுமுறை - விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம்-அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசி மாத பிரம்மோற்சவம் 08.03.2024 முதல் 20.03.2024 வரை நடைபெறுவது - 14.03.2024 (வியாழன் கிழமை) திருத்தேர் உற்சவம் அன்று உள்ளூர் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது-உள்ளூர் விடுமுறையினை ஈடு செய்யும் தேதி 23.032024 மாற்றம் செய்து 30.03.2024 அன்று பணிநாளாக அறிவித்தல் தொடர்பாக.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகளின்படி, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் மற்றும் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் 08.03.2024 முதல் 20.03.2024 நடைபெறும் வரை மாசி மாத பிரம்மோற்சவத்தினையொட்டி 14.03.2024 ( வியாழன் கிழமை) அன்று நடைபெறும் திருத்தேர் உற்சவத்தன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பார்வையில் காணும் செயல்முறைகள் மற்றும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி 14.03.2024 (வியாழன் கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அளித்தும் மேற்படி உள்ளூர் விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் 23.03.2024 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக வழக்கம் போல் செயல்பட உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நேர்வில் நிர்வாக காரணங்களுக்காக, 23.03.2024 (சனிக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு பணிநாளாக உத்தரவிடப்பட்டதை ரத்து செய்து 30.03.2024 (சனிக்கிழமை) அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 30.03.2024 சனிக்கிழமை அன்று பணி நாளாக வழக்கம் போல் செயல்பட உத்திரவிடப்படுகிறது.
Post a Comment