Title of the document

தேர்தல் பணி 2024 - விண்ணப்பம் சமர்பிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை !



வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு , தேர்தல் பணியாற்ற பள்ளி ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. ஆனால் நாளது தேதிவரை பல பள்ளிகளிடமிருந்து விண்ணப்பம் பெறப்படவில்லை எனத் தெரியவருகிறது.

எனவே ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் தேர்தல் விண்ணப்ப படிவங்களை ஒப்படைக்காத அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக 22.03.2024 முற்பகல் 11.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு ஒப்படைக்காத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post