INCOME TAX - CPS பிடித்தம் செய்த தொகை - வருமான வரி பிரிவு 80CCD ( 1 ) , 80CCD ( 2 ) , 80CCD ( IB ) - இன்கீழ் காண்பிப்பது குறித்து தெளிவுரை
பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும்அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும்போது , 80CCD - இல் எந்த பிரிவின்கீழ் காண்பிப்பது என்பது குறித்து கீழ்க்கண்டவாறு தெளிவுரை வழங்கப்படுகிறது .
1 . பிரிவு 80CCD ( 1 ) - இல் 10 % ( Basic Pay + DA ) மட்டுமே கழிவு செய்து கொள்ளலாம் . மேலும் பிரிவு 80C , 80CCC + 80CCD ( 1 ) கீழான கழிவுகளுக்கான தொகை சேர்த்து அதிகபட்சமாக ரூ . 1 , 50 , 000 / - கழித்துக் கொள்ளலாம் .
2 . பிரிவு 80CCD ( IB ) - இன் கீழ் ரூ . 50 , 000 / - வரை கழித்துக் கொள்ளலாம் . மேற்சொன்ன மூன்று பிரிவுகளிலும் சேராது அனுமதிக்கப்படும் ஒரு கூடுதல் கழிவு ஆகும் . இது மத்திய அரசு ஓய்வூதியத் திட்டங்களுக்கு பொருந்தும் .
3. உட்பிரிவு 80CCD ( 1 ) மற்றும் உட்பிரிவு 80CCD ( IB ) ஆகிய இரண்டின் கீழும் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டப் பிடித்தம் செலுத்திய தொகைகளைக் கழித்து கொள்ளலாம் . எனினும் ஒரே தொகையை உட்பிரிவு 80CCD ( 1 ) மற்றும் உட்பிரிவு 80CCD ( IB ) ஆகிய இரண்டிலும் கழித்து கொள்ள முடியாது .
4 . பிரிவு 80CCD ( 2 ) - இல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில் அரசால் செலுத்தப்படும் தொகையைக் கழிவில் கூட்டக்கூடாது . அப்படி கழிவில் கூட்ட வேண்டுமென்றால் வருவாய் கணக்கில் சேர்த்து காண்பித்து , பின்னர் கழிவில் சேர்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்படுகிறது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment