Title of the document

 எப்போது விடுதலை? ஆசிரியர்கள் கேள்வி

கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக, ஆசிரியர்கள்  தெரிவித்தனர்.

அரசு தொடக்கப்பள்ளிகளில், எண்ணும் எழுத்தும் சிலபஸ் கற்பிக்கும் ஆசிரியர்கள், பாடத்துணை கருவிகளை தயாரித்தல், ஆன்லைன் தேர்வு நடத்துதல் உள்ளிட்ட, பல்வேறு பணிகளுக்கு மத்தியில், 'எமிஸ்' இணையதள பதிவேற்ற பணிகளை மேற்கொள்வதில், சிரமம் நீடிப்பதாக தெரிவிக்கின்றனர்.

அலுவலக பணியாளர்கள் இல்லாத நிலையில், நிர்வாக பணிகளையும், இடைநிலை ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டியதுள்ளது.

இதை, கடந்த அக்., மாதம் நடந்த, ஆசிரியர் சங்கங்களுக்கான கூட்டத்தில் எடுத்துரைத்தபோது, விரைவில் 'எமிஸ்' பணிகளில் இருந்து விடுவிப்பதாக, அமைச்சர் மகேஷ் உறுதி அளித்தார்.

ஆனால், இன்னும் ஆசிரியர்களே பதிவேற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக, பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தங்கபாசு கூறுகையில், ''எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்திற்கு, ஆன்லைன் தேர்வு நடைமுறையால், ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆன்லைன் தேர்வுக்கு தொழில்நுட்ப உபகரணங்களோ, இணையதள வசதிகளோ பள்ளிகளில் இல்லை.

இதோடு, எமிஸ் இணையதள பதிவுப்பணிகளும் மேற்கொள்வதால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுகின்றன. மாற்று ஏற்பாடு செய்யாமல், தொடக்கக்கல்வித்துறை மெத்தனமாக செயல்படுகிறது,'' என்றார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post