சம வேலைக்கு சம ஊதியம் கேட்டுப் போராடும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி களத்தில் ஆதரவு
நாளை 28-02-2024 ஒருநாள் மாவட்ட வட்டாரபொறுப்பாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டக்களம் சென்று போராடும் ஆசிரியர்களுக்கு ஆதரவும்கோரிக்கை வெற்றிபெற வாழ்த்தும் தெரிவிக்க மாவட்ட வட்டார நிர்வாகிகளுக்கு பொதுசெயலர் அழைப்பு.
கடந்த 19ஆம் தேதி முதல் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதி எண் 311-சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள், தொடர்ந்து ஒன்பதாவது நாளாக இன்று மாவட்ட தலைநகரில் ஆர்பாட்டம் நடத்தி வருவது வருத்தத்தை அளிக்கிறது.
அரசு அவர்களை உடனடியாக அழைத்து பேசி கோரிக்கை நிறைவேற்றம் குறித்து அறிவிப்பு வெளியீடு செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது
எனினும் மாவட்ட தலைநகரில்இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கு ஆதரவுக்கரம் அளித்து அரவணைக்க, இயக்க வரலாற்றில் மூத்தவரும், பெரும்அனுபவமும் கொண்ட பொதுச் செயலாளர் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவு செய்து நாளை 28-02-2024 ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் மாவட்ட தலைநகரில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவையும் கோரிக்கை வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவிப்பார் முடிவாற்றுகிறது. என
இதனை மாவட்ட பொறுப்பாளர்கள் செயல்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலும் மீண்டும் தமிழக் அரசு போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறது
அன்புடன்...
செ.முத்துசாமி Ex MLC
பொதுசெயலாளர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment