போகி பண்டிகையின் வரலாறு - Bhogi Festival History in Tamil
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று போகிப் பண்டிகை போகி என்பது பழையன கழிதலும் புதியன புகுதலும்.
அதாவது வெறும் வீட்டிலுள்ள வேண்டாதவற்றை தீயிட்டு பொசுக்குவது போகி அல்ல. நம் மனதில் உள்ள காமம், குரோதம், வன்மம், பொறாமை, அனைத்தையும் களைந்து நல்லதை நினைத்து நல்லதையே செய்வதுதான் பழையன கழிதலும் புதியன புகுதல் என்றும் பொருள்.
இந்தப் போகிப் பண்டிகை எவ்வாறு வந்தது ஏன் போகியைக் கொண்டாடுகிறோம் என்று புராண ரீதியில் விளக்கம் காண்போமா???
மதுராவில் இந்திர விழா வருடா வருடம் நடக்கும். ஒருமுறை கிருஷ்ணர் இந்திரவிழா வேண்டாம் கோவர்தனகிரி விழா நடத்துவோம் என்று கூறி கோவர்த்தனகிரி விழாவை அவ்வருடம் நடத்தினார் .அதனால் இந்திரன் வெகுண்டு மதுராவில் கடும் மழையை பொழிவித்தான்.
சற்றும் அசராமல் கிருஷ்ணர் கோவர்த்தன கிரியை தன் சுண்டு விரலால் தூக்கி அனைத்து மதுரா வாசிகளையும் காப்பாற்றினார்.இதனால் கிருஷ்ணரின் மகிமையை அறிந்து தன் ஆணவம் அகம்பாவம் அனைத்தையும் விட்டு கிருஷ்ணரிடம் இந்திரன் மன்னிப்பு கோரினார்.
இந்திரனுக்கு மறுபெயர்"" போகி"" என்பதாகும். அதனால்தான் மதுராவில் இந்திர விழா என்று கூறுகிறார்கள்.
இந்திரன் தன் ஆணவம் அகம்பாவம் அனைத்தையும் விடுத்து தன் கர்வம் களைந்து தீயவைகளை விட்டொழித்த நாள்தான் போகிப்பண்டிகை .அதன் காரணமாகத்தான் நாமும் அந்நாளில் மமதை அகங்காரம் கர்வம் காமம் குரோதம் கோபம் முதலியவற்றை விட்டு ஒழித்து நல்வழிபட்டு நல்லது செய்ய வேண்டும் என்பதற்கு இந்தப் பண்டிகை ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இதுவே போகிப்பண்டிகை தோன்றியதற்கான காரணம்.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment