Title of the document

 SEAS - மாநிலக் கல்வி அடைவு ஆய்வு சார்ந்து தெரிவுசெய்யப்பட்டுள்ள பள்ளித் தலைமை ஆசிரியரின் பொறுப்புகள் !

SEAS - மாநிலக் கல்வி அடைவு ஆய்வு சார்ந்து தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளித் தலைமை ஆசிரியரின் பொறுப்புகள் RESPONSIBILITIES OF THE SCHOOL HEAD SCHOOL SELECTED BASED ON SEAS - STATE EDUCATION DIRECTORY STUDY -

மாநிலக் கல்வி அடைவு ஆய்வு சார்ந்து தெரிவுசெய்யப்பட்டுள்ள பள்ளித் தலைமை ஆசிரியரின் பொறுப்புகள்

செய்ய வேண்டியவை :

1. வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளரிடமிருந்து (From the BLC) வினாத்தாள்/வினாநிரல் கட்டுகள், OMR உறைகள், பேனாக்கள் எண்ணிக்கை போன்றவற்றைத் தங்கள் பள்ளிக்கு உரியதுதானா எனச் சரிபார்த்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

2. தங்கள் பள்ளிக்கு உரிய கட்டுகளைக் கள ஆய்வாளர் வரும் வரை பீரோவில் பூட்டி வைத்துப் பாதுகாக்க வேண்டும். 3. மேற்கண்ட அனைத்தும் UDISE படி சரியாக உள்ளதா என உறுதிசெய்ய வேண்டும்.

4. தலைமை ஆசிரியர் முன்னிலையில் மட்டுமே கள ஆய்வாளர் கட்டுகளைப் பிரிக்க வேண்டும்.

5. மாணவர்கள் தேர்வு நாளன்று விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருவதை உறுதிசெய்தல் வேண்டும். மாணவர்கள் அமருவதற்குத் தேவையான அறையை ஒதுக்கித்தர வேண்டும்.

6. பிரிவுகளைத் தெரிவுசெய்தல் மாணவர்களைத் தெரிவுசெய்தல் ஆகியவற்றில் கள ஆய்வாளருக்குத் தேவைப்படும் விவரங்களைக் கொடுத்துதவ வேண்டும்.

7. பள்ளியின் பின்கோடு எண், வருகைப் பதிவேடு. மாணவர்களின் பாலினம், பிரிவு, சிறப்புத் தேவை உடைய குழந்தைகள் போன்ற விவரங்களை வழங்க வேண்டும்.

8. கள ஆய்வாளரின் வருகை, தேர்வுத் தொடக்கம், தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை, ஆய்வு அலுவலர் வருகை போன்றவற்றை வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

9. தேர்வுப் பொருள்களை உரிய உறையில் வைத்து வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளரிடம் தேர்வுநாள் அன்றே ஒப்படைக்க வேண்டும்.

10. ஏதேனும் ஐயம்/சிக்கல் எனில் உடனடியாக ஒருங்கிணைப்பாளருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை :

1. வினாத்தாளைப் பார்க்க விழைதல், வினா நிரல், OMR ஆகியவற்றைப் போட்டோ எடுத்தல், வீடியோ எடுத்தல், ஜெராக்ஸ் எடுத்தல். 

2. மென்படியாகவோ வன்படியாகவோ இத்தேர்வு விவரங்களைச் சமூக வலைதளங்களிலோ பிற இடங்களிலோ பகிர்தல்.

3. தேர்வு அறைக்குள் கள ஆய்வாளர்((FI))/ஆய்வு அலுவலரைத்(Monitoring officer) தவிர பிறரை(ஆசிரியர்கள் உட்பட) அனுமதித்தல்.

4. நேரடியாகவோ மறைமுகமாகவோ மாணவர்களுக்கு உதவ முற்படுதல்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post