Title of the document

 ஜாக்டோ - ஜியோ (JACTTO -GEO) டிசம்பர் 28ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிப்பு ! 

ஜாக்டோ - ஜியோ, JACTTO -GEO  

ஜாக்டோ - ஜியோ, JACTTO -GEO

ஜாக்டோ - ஜியோ (JACTTO -GEO)

Joint Action Council of Tamilnadu Teachers Organisation and Government Employees Organisation

டிசம்பர் 28 கோட்டை முற்றுகை கோரிக்கை சாசனம்

  • 1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
  • காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
  • இடைநிலை ஆசிரியர்களுக்கும். உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தைைமயாசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
  • 8 முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS), ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
  • சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், அதேபோல் 171 தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
  • அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
  • 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்-அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
  • 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்
  • சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும்.
  • உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத்துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும்.


நான்கு கட்ட போராட்ட அறிவிப்பு :

1. நவம்பர் 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மாலைநேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

2. நவம்பர் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆசிரியர்- அரசு ஊழியர்- அரசுப் பணியாளர் சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கம்.

3. நவம்பர் 25 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம்.

4. டிசம்பர் 28 ம் தேதி சென்னையில் லட்சக்கணக்கான தோழர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகை போராட்டம்.


அணி வகுப்போம்...! சமர் புரியவே! நம் துயர் போக்கவே!

- ஒருங்கிணைப்பாளர்கள்
ஜாக்டோ - ஜியோ

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post