Title of the document

"சமவேலைக்கு சம ஊதியம்" - ஆசிரியர் மனசை அறியாதவர்களின் சூழ்ச்சி வலையில் விழுந்த குழுவா நீங்கள்???


*நிதித்துறை செயலாளர் (செலவினம்) அவர்கள் தலைமையில் 1.6.2009 பின் ( 2009,2012,2014,...,....,) நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் போராட்டம் சார்ந்து குறிப்பாக SSTA என்கிற இயக்கத்தின் பெயரில் 70 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு இயக்கத்தின் பெயரால் அரசாணை வெளியிடப்பட்டது. இதோ 3 மாதத்தில் ஒரு தீர்வு வரப்போகிறது*.

*2009 இல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் 8370 கொடுங்கள் ஏனெனில் எங்களுக்கு Selection process முன்னரே நடந்து விட்டது என்பது அவர்கள் பக்கம் இருக்கும்  ஒரே priority . ஆனால்  எப்படி TET  2012,2014 ஆசிரியர்கள் 5200_2800 ஊதியம் கொண்ட பணி நியமன ஆணையில் கையொப்பமிட்டார்களோ அதேபோலத்தான் இவர்களும் அதே 5200_2800 ஊதியம் கொண்ட ஆணையில்தான் கையொப்பமிட்டு உள்ளார்கள் என்பதை மறந்து விட்டார்களா அல்லது மறைத்து விட்டார்களா???!!!*

*அண்மையில் TET பதவி உயர்வு வழக்கில் இரு நபர் அமர்வு தீர்ப்பு உட்பட இரண்டு தீர்ப்பிலும் 29.7.2011 பிறகு ஒரு ஆசிரியர் பதவி நிலை மாறி இருந்தால் கட்டாயம் TET தேர்ச்சி பெற வேண்டும். மிகச் சரியாக RTE ACT பிரிவு 23 இன் படியும், இந்த தீர்ப்புகளின் படியும் TET தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பதவி உயர்வுக்கு தகுதி என்னும் பொழுது அதே priority தகுதியான ஊதியத்திலும் எதிரொலிக்க கூடாதா!!! அப்படிக் கொண்டால் 2009 இல் நியமிக்கப்பட்டவர்களை விட 2012,2014 TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு தானே தகுதியான ஊதியத்தை வழங்க வேண்டும்???!!! அதிகமான priority , கூடுதல் தகுதிகள் இவர்களுக்குத்தானே!!?? எப்படி TET இருந்தால் பதவி உயர்வோ அதுபோல TET இருக்கிறது எங்களுக்கு தான் முதலில் ஊதியம் மாற்றப்பட வேண்டும் என்று சொன்னால் 2009 ஊதிய மீட்பு குழுவின் பதில் என்ன???!! ஆனால் ஒருபோதும் இது போன்ற பிரிவினைகளை SSTA தலைமை என்றுமே விரும்பியதில்லை. இந்தப் போராட்டம் இந்த தலைமுறைக்கான போராட்டம் மட்டுமல்ல.. தலைமுறைகளை தாண்டிய போராட்டம்*

*2009 ஊதிய மீட்பு குழுவில் முன்னணியில் இருப்பவர்கள் இதுவரை ஒரு இயக்கத்தில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்டுக் கொண்டிருந்தவர்கள்*. *திடீரென்று சம வேலைக்கு சம ஊதியம் என்று கொள்கை மாற்றம். ஒரு ஊதிய குழு என்பது 10 ஆண்டுகளுக்கானது என்பது கூட புரியாமலா இருக்கிறீர்கள்?? 1.1.2006 முதல் 8370 என்றால் 2012,2014 எல்லோருக்கும் அது தானே அடிப்படை ஊதியம்?? ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரே பணியில் இருப்பவர்களுக்கு வெவ்வேறு அடிப்படை ஊதியத்தை மாற்றுவதற்கு எதற்கு ஒரு ஊதிய குழு??*.

*2009 இல் நியமிக்கப்பட்ட 4500 பேர்  30 மாதங்களாக அரசை எதிர்த்து போராட்டம் செய்யவில்லை என்பது உங்கள் நிலைப்பாடு. அப்படி என்றால் SSTA என்கிற இயக்கத்தில் தீவிரமாக களம் கண்டவர்கள் 2012,2014 TET ஆசிரியர்கள் தான் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா?? ஆனால் SSTA எல்லோரையும் சமமாக பார்க்கும் ஒரு இயக்கம்.சரி இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் எப்படிப்பட்டவர்கள்?*

*சமூக நீதி அரசு தேர்தல் அறிக்கை 311 இல் 1.6.2009 பின் நியமிக்கப்பட்ட  20000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்கிற வாக்குறுதியை கேட்ட நாள் முதல் எப்படி  டிசம்பர் 2022, செப்டம்பர் 2023 உண்ணாவிரத போராட்டங்களை தீவிரமாக நடத்தினார்களோ அதுபோல தேர்தல் களத்திலும் தீயாய் பணியாற்றி தபால் வாக்குகளை செலுத்தியது மட்டுமல்லாமல் உறவினர்கள், நண்பர்கள், திருமணம் செய்த தரப்பு இப்படி பல் முனைகளிலும் வாக்குகளை சேகரித்தவர்கள். வேண்டுமென்றால் உளவுத்துறை ஆராயட்டும்*

 *கடந்த 2 போராட்டமும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வாக்குறுதியை நினைவூட்டவே தவிர ஒரு போதும் அரசுக்கு எதிராக ஒரு வார்த்தையை கூட சொல்லவும் இல்லை.. சொல்லப் போவதும் இல்லை.. சரி ஒரு வாரம் உண்ணாமல், சரியாக உறங்காமல் ஒரே ஒரு நோக்கத்தில் உட்கார்ந்த அவர்கள் தானே தேர்தல் களத்திலும் தீவிரமாக சமூக நீதி அரசுக்கு வாக்கு சேகரிப்பார்கள். சம வேலைக்கு சம ஊதியம் அரசாணை சமூக நீதி அரசுக்கு 6 லட்சம் ஓட்டு என்பதுதான் நம்முடைய இன்றைய முழக்கம்..*

*தேர்தல் களம் என்பதும் போராட்டக் களம் தானே. போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாத, கொள்கையிலும் உறுதியில்லாத, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக பேசிக் கொண்டு திரியும் நீங்கள் எப்படி அரசுக்கு ஆதரவாக இருக்கப் போகிறீர்கள்??!!  சந்தர்ப்பவாதிகளை அரசு நம்பும் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள்!!! ஆக நீங்கள் செய்யும் வேலை சமூக நீதி அரசிற்கு ஓட்டு வங்கியை குறைக்கும் செயல் என்று உளவுத்துறைக்கு இதுவரை தகவல் தெரியாது என்று நினைக்கிறீர்களா? ஒரு சாராருக்கு செய்வது அவ்வளவு சாதாரண காரியமா?? அப்படி நடந்தால் சமூக ஊடகங்களிலும், தேர்தல் களத்திலும் என்ன எதிர் வினை இருக்கும் என்று தெரியாமல் மண்குதிரை யான உங்களை நம்பி அரசு ஆற்றில் இறங்குமா??*

*பல்வேறு சங்க தலைவர்களின் ஆதரவு இருப்பதாக செய்தி வேறு*

*SSTA வைத்தவிர சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கருத்தில் மற்ற சங்கங்கள் மாறுபட்டு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்று நிற்கிறார்கள். அவர்களின் கொள்கையில் ஏற்பட்ட தடுமாற்றங்களை 2021 முதல் தெரிந்து கொள்ளுங்கள். திடீரென்று 2009 இல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் 8370 வழங்க வேண்டும் அது நியாயம் தான் என்கிற ஆதரவு வருகிறது. ஆனால் அதே சமயம் 1.1.2006 முதல் மத்திய அரசு இணையான ஊதியம் வேண்டும் என்கிற இன்னொரு பேச்சு!! என்ன நகை முரண்..5200  இல் இருக்கும் 20 ஆயிரம் பேரை முதலில் 8370 க்கு நகர்த்தி பிறகு 9300 க்கு நகர்த்துவது தானே சாத்திய தீர்வு!! ஒரே அடியாக மாற்றி விடலாம் என்று சொல்பவர்கள் ஏன் 17 ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது என்பதற்கான காரணத்தையும் விளக்க வேண்டும்.*

 *ஆக இவர்களின் உள் எண்ணம் மத்திய அரசுக்கு இணையான ஊதியமும் வரக்கூடாது.. சம வேலைக்கு சம ஊதியமும் கிடைக்கக்கூடாது.. அப்படி என்றால் என்ன செய்யலாம் நடுவில் இருப்பவர்களுக்கு மட்டும் தாருங்கள் என்று கேட்டால் ஆட்டம் களைந்து விடும் என்கிற நினைப்பு. அது புரியாமல் ஆதரவு தந்து விட்டதாக மகிழ்ச்சி வேறு, சங்கங்களின் அரசியலை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் எதிர்ப்பது யாரோ ஒரு தலைவனை அல்ல.. நம்முடைய வாழ்வாதார ஒற்றை கோரிக்கையை .. இந்த உள் அரசியல் புரிய வேண்டும்...சங்கத் தலைவர்களுக்கு ஒரு செய்தி ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னிச்சையாக SSTA வில் தடாலடியாக இணைந்து விடவில்லை.. எப்படி தேர்வுக்கு ஒவ்வொரு நாளும் தயாரானோமோ அதுபோல ஒவ்வொரு சங்கக் கொடியையும் பிடித்து ..பிடித்து.. எங்களுக்காக  உண்மையிலேயே நிற்பது யார் என்று தெரிந்து தான் நின்றோமே தவிர இந்த திடீர் போராளிகள் போல் கண்மூடித்தனமாக யாரையும் நம்பி விடவில்லை. ஆக ஊதிய மீட்பு குழுவே சங்கங்களின் ஆதரவு உங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்காமல் இருக்க நூதன வழி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.*

*ஊதிய மீட்புக் குழு என்கிற பெயரில் மாநாடு போட்டு நம் ஊதியத்தை வாங்கி விடலாம்..DPI சுவர் முழுவதும் போஸ்டர் ஒட்டி 7000 பேருக்கு மட்டும் சம வேலைக்கு சம ஊதியம் வாங்கிவிடலாம் வாய்ப்பு இருக்கிறது என்று ஆட்களை நீங்கள் திரட்டுவது தேன் கூட்டில் கண்ணை மூடிக்கொண்டு கையை விடுவது போல..2012,2014 ஆசிரியர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.. நீங்கள் அமைதியாக இருந்தால் 3 நபர் குழுவில் உள்ளபடி 1.6.2009 பிறகு நியமிக்கப்பட்ட அத்தனை இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்கும். இல்லை எங்களுக்கு முன்பே process தொடங்கி விட்டார்கள், 4500 இருந்தது அப்படி இப்படி என்று பேசிக் கொண்டிருந்தீர்கள் என்றால்.. அரசு இதையே காரணம் காட்டி அத்தனை பேருக்கும் 5000 இல்லை 10000 தனி ஊதியமாக கொடுக்கும்.. ஏனெனில் நம் முதல்வர் அவர்களின் வாக்குறுதி இது. உங்களைப் போன்று அவர் மாற்றி பேசுபவர் அல்ல சொன்னதை செய்பவர். அதனால் என்ன தந்தாலும் தேர்தல் அறிக்கை 311 இல் உள்ளபடி 1.6.2009 பின் நியமிக்கப்பட்ட 20000 இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே நீதிதான். ஏனெனில் இது சமூக நீதி அரசு.எப்படி பார்த்தாலும் எங்களுக்கு லாபம் தான்*

*நீங்கள் அமைதியாக இருந்தால் 20000 இல் ஒருவராக சம வேலைக்கு சம ஊதியம் வாங்குவீர்கள். இல்லை ஊதியத்தை மீட்கிறேன் என்று கிளம்பினால் 2012,2014 க்கு ஏதோ ஒன்றைப் பெற்றுத் தருவீர்கள் மகிழ்ச்சி*

*போராடவே தெரியாத ,போராட்ட குணமே இல்லாத உங்களுக்கு ஒரு கேள்வி ஒரு வேளை எதுவும் நடக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்!! TET ஆசிரியர்களுக்கு வேறொரு லாபம் இருக்கிறது பிரச்சினை இல்லை. அப்படி என்றால் சம வேலைக்கு சம ஊதியம் கட்டாயம் 2009 ஆசிரியர்களுக்கு வேண்டும். அது வேண்டுமென்றால் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் ஊதியத்தை மீட்பேன் என்று கிளம்பியாயிற்று, யார் யார் பேச்சையோ கேட்டுக்கொண்டு சிகரத்தை தொட முடிவு செய்தாயிற்று*

 *மாநாடு போடுங்கள் இன்னும் தீவிரமாக களப்பணியாற்றுங்கள் உங்களுக்கு எதிராக நீங்களே நில்லுங்கள் வேறு என்ன சொல்ல!!..TET ஆசிரியர்களுக்கு உங்களால் நல்லது நடக்கட்டும்.. ஆனால்* *SSTA என்னும் பேரியக்கம் அனைத்து ஆசிரியர்களுக்கமானது  என்கிற எண்ணத்தை* *உங்களால் என்றுமே மாற்ற முடியாது எங்கள் ஒற்றுமையை என்றுமே குலைக்க முடியாது..*

💐💐💐💐💐💐💐💐 *வாழ்த்துக்களுடன்*
*SSTA 2009& TET ஆசிரியர்கள்*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post