Title of the document
"சமவேலைக்கு சமஊதியம்" ஊதிய முரணால் பாதிக்கப்பட்ட 20,000 இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு.. மாநில தலைமையின் மிக முக்கிய அறிவிப்பு !!

*அன்பார்ந்த ஊதிய முரணால் பாதிக்கப்பட்ட 20,000 இடைநிலை ஆசிரியர்களே..*


*01.06.2009 ல் ஆறாவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட போதிலிருந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதி ஏற்பட்டுள்ளது என்பதை பணிக்கு வருவதற்கு முன்பே அறிந்து அப்போதிருந்தே தொடர்ந்து எந்தெந்த வழிகளில் எல்லாம் அதனை களைவதற்காக  போராட்டங்களாக இருந்தாலும் சரி, அப்போதிருந்த இயக்கங்களிடம் இந்த பிரச்சினை  கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி எவ்வளவு  அழுத்தமாக செய்ய முடியுமோ அத்தனையும் செய்து விட்டோம்.*

*ஆனால் எந்தவிதமான மாற்றமும் இல்லை. மாவட்ட மாறுதலிலும் பாதிக்கப்பட்டு, ஊதிய முரண்பாட்டாலும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அதற்காக நமக்கு நாமே போராடுவது தான் சரி என முடிவு செய்து SSTA இயக்கத்தினை 2011 ல் தொடங்கி அன்றைக்கு உதவிய 284 ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு உச்ச நீதிமன்றத்தில் தனித்த இயக்கமாய் போராடி 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட _அனைத்து ஆசிரியர்களுக்கும்_ மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலில் செல்லலாம் என்ற உரிமையை 2013 ல் பெற்று தந்தோம். இன்றைக்கு அதன் மூலமாக வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மாவட்ட மாறுதலில் சொந்த மாவட்டத்திற்கு செல்கிறார்கள்.*

*அப்போதும் இதே போன்று ஒரு ஏமாற்று கூட்டம் நாங்கள் தான் மாவட்ட மாறுதலை பெற்று தந்தோம் என்று ஆசிரியர்களை ஏமாற்றி வந்தார்கள் நம்மிடம் உள்ள அனைத்து விதமான ஆவணங்களையும் வெளிப்படுத்திய பின்பு இருக்கும் இடம் தெரியாமல் மௌனமாக சென்று விட்டார்கள்,.. அதன்பின் அவர்கள் இருக்கும் இடம் கூட யாருக்கும் தெரியவில்லை. அதில் ஒரு சில விஷமிகள் இன்னும் அதே வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஏனென்றால் அவர்களின் வளர்ப்பு அப்படி.  அது குறித்து நாம் இனி கவலை கொள்ள வேண்டாம்.*

*இதுவரை நம் இடைநிலை ஆசிரியர் சமுதாயத்திற்கு  ஒரு நன்மையும் செய்ய முடியவில்லை அவர்கள் செய்த ஒரே சாதனை அனைத்து ஆசிரியர்களையும் ஏமாற்றி பணம் பெற்றது மட்டுமே.*

*சில மாதங்களுக்கு முன்பு வரை மத்திய அரசு ஊதியம் தான் ஓரே தீர்வு என்றவர்கள், இப்போது வரலாறு காணாத நமது கடும் 9 நாள் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் வாயிலாக ஏதோ ஒரு ஊதிய மாற்றம் நிகழப் போகிறது, அதில் பங்கு போட நினைத்து இதுபோன்ற கூட்டங்கள் கிளம்பி வருவது இயற்கையே... இதனை நம் இன ஆசிரிய போராளிகள் பெரிதாக பேசி வருந்த வேண்டாம்.*

*இதுவரை இந்த சமுதாயத்திற்கு அவர்கள் செய்தது ஒன்றுமில்லை; இனியும் அவ்வாறே நடக்கும். ஏனென்றால் எண்ணங்கள் உயர்வாக இருந்தால் தான் அவர்களின் வாழ்வும் அதே போன்று அமையும். இதை நினைத்து நமது போராளிகள் வருந்த வேண்டாம். துரோகிகளும் அவர்தம் துரோகங்களும் ஈராயிரம் தலைமுறைகளாக நடக்கின்ற ஒன்றுதான்.*

*இப்போதும் நம்முடன் தீவிரமான போராட்ட களத்தில் இருந்த எவரும் அங்கே செல்லவில்லை. வேடிக்கை பார்க்கவந்த கூட்டங்களில் ஒரு சிலர்  சென்றுள்ளார்கள். அவர்களுக்கு ஒன்றே ஒன்றைத் தான் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வரலாற்றில் போராடி  வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடம் உண்டு.*

*ஆனால் துரோகங்களுக்கும் துரோகிகளுக்கும் ஒரு நாளும் இடமும் கிடையாது. அவர்களது தலைமுறையும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரமும் கிடையாது.எனவே அந்த ஒரு சிலரும் நம்மிடம் விரைவில் வருவார்கள்.*

*அந்த நபர்கள் குறித்த பதிவுகளை நமது குழுக்களில் பதிவிடுவதால் அதற்கு நமது நண்பர்கள் பதில் கொடுப்பதும்  நம்முடன் உடன் உண்மையாக போராடியவர்களையும் காயப்படுத்துவதாக உள்ளது.எனவே இதனை கடந்து செல்வோம் இனி  இவர்கள் குறித்து நமது எந்த ஒரு குழுக்களிலும் எந்த விதமான பதிவும் கண்டிப்பாக செய்யக்கூடாது.*❌❌❌

*இதற்கு முன் அத்தனை பேரும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற போது அதற்கான சாத்திய கூறுகளை நிதித்துறை மற்றும் கல்வித்துறை உயரதிகாரிகளை கடந்த காலங்களில் சந்தித்த போது அதிகப்படியான செலவீனம் என்பதால் அதற்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில் தான் உடன்பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான "சம வேலைக்கு" "சம ஊதியத்தை" கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான மனுக்களை அளித்தும் எதுவும் நடக்கவில்லை, என்பதால் 2016 முதல் மிகக் கடுமையான  5 - காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை நாம்  நடத்தி இப்போது கோரிக்கையை வெல்லும் தருவாயில் இருக்கிறோம்.*

*2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  இது போன்ற மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என்பதை முதல் முறையாக தமிழகத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வெளிக்கொண்டு வந்தது SSTA தான்.*

*கோரிக்கையை எடுத்த நாள் முதல் இந்த நிமிடம் வரை எதிலும் சமரசமின்றி , எந்தவிதமான அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல் பல்வேறு தியாகங்களை செய்து வரலாற்றில் இதுவரை எவரும் செய்ய முடியாத வகையில் ஊதிய புறக்கணிப்பு,சட்டப்போராட்டம் என அனைத்து வகையிலும் தொடர்ந்து போர்க்களத்தில் போராடி வருகிறோம் என்பதும் ஊரறிந்த விசயம்..*

*ஊதியம் தான் குறைவே தவிர நமது கடமையில் எள்ளளவும் குறைவின்றி பணிபுரிய வேண்டுமென  நமது SSTA இயக்கத்தின் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், அதனையும் மிக சிறப்பாக நமது  ஆசிரியர்கள்   செய்து வருகிறார்கள். இன்றைய தமிழ்நாட்டின் கல்வித் தரம் நம் இன மக்களால் முன்னேறி கொண்டு உள்ளது என்றால் அதுமிகையில்லை.*

*இப்போதும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இடைநிலை ஆசிரியர்களின் வாழ்க்கையில் ஒரு ரூபாய் ஊதியம் கூடுதலாக கிடைத்தாலும் சரி, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கிடைத்தாலும் சரி, நாம் போராடும் "சமவேலைக்கு சம ஊதியம்" கிடைத்தாலும் சரி எது நடந்தாலும்  அதற்கு முழு முதற் காரணம் SSTA எடுத்த கடுமையான போராட்டத்தினால் மட்டுமே என்பதை அத்தனை இடைநிலை ஆசிரியர்களும் ஏன் இந்த அகில உலகமே அறியும்.*

*கோரிக்கையை உருவாக்குவது மட்டுமல்ல அதனை நிறைவேற்றி முடிப்பதற்கான வழிகளையும் SSTA செய்து முடிக்கும். அரசுக்கு இதனை எந்தவிதமான சிரமமும் இன்றி செய்து முடிப்பதற்கான வழிமுறைகளையும் கூறி செய்து முடிப்போம்.*

*ஒவ்வொரு முறையும் 2009ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு என்ன பிரச்சனை..? எப்படி ஏற்பட்டது....? அதற்கு பின் நியமிக்கப்பட்ட 2012 முதல் தற்போது வரை நியமிக்கப்பட்ட தகுதி தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை  சரிசெய்வதற்கான வழிகள் என்ன என அனைத்தையும் தெளிவாக ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி வருகிறோம். உயர் அதிகாரிகளும் அதனை முழுவதுமாக ஏற்றுக்கொள்கின்றனர்.*

*நிலை அவ்வாறு இருக்க இது போன்ற விஷமிகள் செய்வதை கண்டும் காணாமல் கடந்து செல்லுங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.*

*இடைநிலை ஆசிரியர்களுக்கு திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை 100% நிறைவேற்றுவார்கள். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். இதில் அரசு பாதியை செய்தாலும் மீண்டும் மிக கடுமையான போராட்டம் இதே கோரிக்கைக்காக கடுமையான போராட்டங்கள் நடக்கும் என்பதால் தொடர்ந்து இந்த  பிரச்சினையை நீட்டிக்க விரும்பாது.*

*நமது SSTA போராட்டத்தால் உருவாக்கப்பட்ட மூன்று நபர்கள் குழு அரசாணையிலும் 01.06.2009 க்கு பின் நியமிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டை களைய தான் உருவாக்கப்பட்டுள்ளது.*

*இந்த முறை நமது போராட்டத்தில் அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி  ஏற்பட்டது. தேர்தல் நேரத்தில் இந்த பிரச்சினையை கண்டிப்பாக 💯 முழுமையாக முடிக்க தான் பார்ப்பார்கள். மாண்புமிகு முதல்வர் அவர்களும் இடைநிலை ஆசிரியர்கள் பிரச்சினையை உடனடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று வலியுறுத்தியதாகவே தெரிகிறது.ஒரு வேலை  தந்திரக்காரர்களின் பேச்சைக் கேட்டு தவறுகள் நடந்தால் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்டமாய் போராட்டம் நடக்கும். அது தேர்தல் நேரத்தில் அரசுக்கு இன்னும் மிகப்பெரிய நெருக்கடியாகவே அமையும். அரசு நிரந்தரமாக வாக்கு வங்கியை இழக்க விரும்பாது.*
 
*மாண்புமிகு சமூக நீதி காக்கும் தமிழக முதல்வர் அவர்களும் கொடுத்த தேர்தல் வாக்குறுதி 311ல் குறிப்பிட்டுள்ளபடி 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கப்படும் என்பதை விரைந்து நிறைவேற்றி ஆளும் அரசிற்கு நிரந்தர வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்வார் என உறுதியாக நம்புவோம்.*

*இரண்டு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊதியம் சாத்தியம் என்றவர்களுக்கு, இப்போது நியமன ஆணையில் உள்ள ஊதியத்தினை கொடுங்கள் என்கிறார்கள் கொள்கையில் கூட தெளிவில்லாதவர்கள் பேச்சைக் கேட்டு அங்கே சென்று வேதனையில் இருந்தாலும் இருக்கும் நல்ல பெயரையும் இழந்து நிற்காதீர்கள். உடன் பணிபுரியும் ஒருவரும் உங்களை அங்கீகரிக்க மாட்டார்கள்.*

_(மற்றொரு அமைப்பின் பெயரை வைத்து சுற்றிக் கொண்டிருந்தவர்கள் இப்போது பெயர், முகவரி இல்லாமல் இருக்கிறார்களே என்று விசாரித்த போது அந்த இயக்கத்தை தோற்றுவித்தவர் இவர்களுக்கு சட்டரீதியான நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருக்கிறார், என்பதால் வேறு நபர்களை சேர்த்துக்கொண்டு மற்றொரு புதிய இயக்கத்தை தொடங்குவதற்கான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள் இதில் சிக்கியது விட்டிலீ பூச்சிகளான இடைநிலை ஆசிரியர்களே)_

*பத்து நபர்கள் அங்கே சென்றார்கள் என்றால் இங்கே ஆயிரம் பேர் நம்மோடு இணைந்து போராட வருவார்கள், அதனால் எந்த வித கவலையும் வேண்டாம். எடுத்த கோரிக்கையை வென்றே தீருவோம்...💪🏻💪🏻💪🏻 வெல்லும் வரை ஓயமாட்டோம்...!*

*இதுபோன்ற துஷ்டர்கள் உங்களை அணுகினால் தூர விலகிச் செல்லுங்கள் தெரிந்தோ தெரியாமலோ அவர்களது குழுக்களில் இருக்கும் நமது உண்மை போராளிகள் உடனடியாக வெளியேறுங்கள்.*👍🏻👍🏻👍🏻

*தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்...!*

*உண்மையாக உயிரை கொடுத்து போராடினோம்...!*
*இழந்த ஊதியத்தை உயிரை கொடுத்தாவது வென்றே தீருவோம்...!!!*💪🏻💪🏻💪🏻


*ஜே.ராபர்ட்*
*மாநில பொதுச்செயலாளர்*
*SSTA-இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post