மனைவியின் பிரசவத்திற்கு தந்தை வழி விடுப்பு 15 நாள் உண்டு - எப்போது வழங்கப்படும்? - RTI Reply Letter
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரு.கே. ஜீவா என்பார் கோரப்பட்ட தகவல்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
1. தந்தைவழி விடுப்பு இரண்டுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட அனைத்து ஆண் பணியாளர்களுக்கு ( தகுதிகாண் பருவத்தினர் உட்பட ) 15 நாட்களுக்கு விடுப்பு வழங்கத் தகுதியுள்ள ஒரு அதிகாரியால் தந்தைவழி விடுப்பு வழங்கப்படும். அதாவது அவரது மனைவியின் பிரசவத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும்.
2. தந்தைவழி விடுப்பு வேறு எந்த வகையான விடுமுறையுடனும் இணைக்கப்படலாம்.
3. தந்தைவழி விடுப்பு , விடுப்புக் கணக்கிலிருந்து பற்று வைக்கப்படாது.
4. தந்தைவழி விடுப்பு குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் பெறப்படாவிட்டால் அத்தகைய விடுப்பு காலாவதியானதாக கருதப்படும்.
குறிப்பு : பொதுவாக எந்த சூழ்நிலையிலும் தந்தைவழி விடுப்பு நிரகரிக்கப்படாது # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment