Title of the document

காலாண்டு தேர்வு விடுமுறை... வந்தது புதிய அறிவிப்பு... பள்ளிக் கல்வித்துறை இப்படி ஒரு ஏற்பாடு!


தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு 15ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடக்கின்றன. அனைத்து வகுப்புகளுக்கும் 27ஆம் தேதி தேர்வுகள் முடிந்து விடுகின்றன. அதன்பிறகு 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு விடுமுறை

அவை செப்டம்பர் 28 (மிலாடி நபி - அரசு விடுமுறை), செப்டம்பர் 29 (வெள்ளி), செப்டம்பர் 30 (சனி), அக்டோபர் 1 (ஞாயிறு), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி - அரசு விடுமுறை) ஆகும். இதில் வெள்ளிக்கிழமை மட்டும் தான் காலாண்டு தேர்வு விடுமுறையாக பார்க்கப்படுகிறது. மற்ற நாட்கள் அரசு விடுமுறை, சனி, ஞாயிறு என அமைந்துவிடுகிறது. அக்டோபர் 3ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

NSS சிறப்பு முகாம்



இந்த விடுமுறை நாட்களில் நாட்டு நலப்பணித் திட்டம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடர்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழக பள்ளிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் நாட்டு நலப் பணித்திட்ட (NSS) அமைவானது 2023-24ஆம் கல்வியாண்டில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

​முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை

அதுவும் காலாண்டு தேர்வு விடுமுறை உட்பட 7 நாட்கள் நடத்திட உரிய திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் வேண்டும். இதற்காக நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலருக்கு சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும். குறிப்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து, தங்களின் மாவட்டத்தில் நாட்டு நலப்பணித்திட்டம் செயல்பட்டு வரும் பள்ளிகள் சார்பில் சிறப்பு முகாம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

​ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நகல் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து திட்ட அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 29ஆம் தேதி வரை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு குழு சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

செப்டம்பர் 25 முதல் 27 வரை ஒன்று முதல் 3ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் கொண்டு வரப்பட்டு அடிப்படை கல்விக்கு வலுவான அடித்தளம் போட அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு பயிற்சியும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. அப்ப விடைத்தாள்களை எப்ப திருத்த வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post