Title of the document
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன் - நடிகர் சூரியா பேச்சு



அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று நடிகர் சூரிய தெரிவித்துள்ளார். மாணவர்கள் பள்ளிக்கு வரவைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும் என்று நடிகர் சூரிய தெரிவித்துள்ளார். இதுபோன்ற கல்வி உதவித் தொகை வழக்கும் நிகழ்வால்த்தான் வாழ்கை முழுமையடைகிறது என்றும் நடிகர் சூரிய தெரிவித்துள்ளார்.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பெற்றோரை இழந்த 12-ம் வகுப்பு மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகையை நடிகர் சூர்யா இன்று வழங்கினார். இதற்கான விழா ஒன்றும் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் சூர்யா, சிவக்குமார், கார்த்திக் என பலரும் கலந்துகொண்டார்கள்.

அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா ” அகரம் மூலம் 5200 மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற 14 வருடங்கள் ஆனது. ஆனால் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிக்கும்போது கடந்த 3 வருடங்களில் 1 லட்சம் மாணவர்களுக்கு உதவ முடிந்தது.

கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்று, கல்வி மூலமா வாழ்க்கையை படிங்க, வாழ்க்கை மூலமா கல்வியை படியுங்கள். வாழ்க்கை முழுவதும் கல்வி ரொம்ப தேவை, கல்வி மார்க் மட்டும் இல்லை. சாதி மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். ஒரு வீண் சொல், பழிசொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக்கூடாது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று நடிகர் சூரிய தெரிவித்துள்ளார். மாணவர்கள் பள்ளிக்கு வரவைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும் என்று நடிகர் சூரிய தெரிவித்துள்ளார்.
நாம் எல்லோருக்கும் சமூகப் பொறுப்பு, சமூக அக்கறை கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒருவருக்கு உதவி செய்தால் அது வேர் போல பரவும். தினமும் காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். அதை நான் இப்போது தான் பின்பற்றி வருகிறேன். முதலில் பிறரை பழி கூறுவது , பிறரைப் பற்றி தவறாக பேசுவதைக் குறைக்க வேண்டும்” என நடிகர் சூர்யா பேசியுள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post