TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்!
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2013 ஆண்டு சென்னை டி பி ஐ வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு நடத்தப்பட்டது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. 30 ஆயிரம் பேர் தேர்வான நிலையில் மீதமுள்ள 20 ஆயிரம் பேருக்கு அரசு பணி வழங்க கோரி இரு தினம் முன்பு டி பி ஐ வளாகத்தில் அனுமதியின்றி உண்ணாவிரத போரட்டத்தை தொடங்கினர்.
மூன்றாவது நாளாக நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் மயங்கி விழுபவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி விழுந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி எண் 177 ல் குறிப்பிட்ட டெட் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி வழங்குவோம் எனும் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மூன்றாவது நாளாக தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசானை எண் 149 ஐ ரத்து செய்து உடனடியாக பணி வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர். எத்தனை முறை தேர்வு வைத்தாலும் தாங்கள் தகுதி தேர்வு எழுத தயாராக உள்ளதாக கூறினர்.
Post a Comment