Title of the document
*இன்று #Group_4 தேர்வில் வெற்றியை இழந்தவர்களுக்கு இந்த பதிவு...* 
(முழுமையாக படிக்க நேரமில்லையெனில் இப்படியே Skip செய்து விடலாம்)

இன்று பலர் இன்னும் ஓரிரு வினா சரியாக போட்டிருந்தால் வெற்றி அடைந்திருக்கலாமோ‌.‌.. 

என்று நடந்நதை எண்ணி வருந்தி கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த பதிவு  உங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் என நம்புகிறேன்...

 *நான்* 2015 கல்லூரி முடித்த உடனேயே அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் என் தாய்மாமா (திரு.ஆறுமுகம்) வழிகாட்டுதலின் படி TNPSC யை‌ தேர்ந்தெடுத்தேன்... அப்போது *வயது: 20* ... 

தனியார் பயிற்சி மையத்தில் (ஜெய்குருதேவ்‌ பயிற்சி மையம், தருமபுரி) திரு.சாதனைக்குறள் மாவட்ட வருவாய் ஆய்வாளர், (தற்போது அரசுப் பணியாளர் பயிற்சி கல்லூரி முதல்வர்) அவர்களின் உரையை கேட்டு எனது மனதில் ஒரு தன்னம்பிக்கை தீ உதித்தது... முயன்றால் இந்த பாதையில் நம்மால் வெற்றியை ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையோடு ஆரம்பித்தேன்.. எனது பயணத்தை... 

கல்லூரி முடித்து வந்த புதிது என்பதால் பெரிய அளவில் இந்த போட்டிக்களத்தின் சூடு எனக்கு தெரியவில்லை... கல்லூரி போலவே வகுப்புகளை மட்டும் தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் சென்றேன்... 

எனது ஏழ்மையினால் என் சொந்த செலவுகளுக்காக கிடைக்கும் வேலைகளையெல்லாம் செய்தேன் (வீடுகளுக்கு செய்தித்தாள் போடுவது, சந்தைகளில் வியாபாரம் செய்வது, மூட்டை தூக்குவது, மளிகை கடைகளில் ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் சம்பளம் என வேலை பார்த்தேன்) என் குடும்பத்தினரும் அவர்களின் வரவுக்கு மீறியும் எனக்கு உதவி செய்தனர்... பின் நான் படித்த பயிற்சி மையத்தில் உதவியாளராக ஒரு பணி கிடைத்தது... ஏற்றுக்கொண்டேன்... வேலை செய்துக்கொண்டே படித்தேன்... நாட்கள் கடந்தன...

கொஞ்சம் நாளிலேயே *Group 2 Interview posts (2015)* வந்தது... முதல் முறை அனுகியதிலேயே 138 வினாக்கள் சரியாக செய்திருந்தேன் ஆனால் கட்ஆப்‌ 150+ 

இதிலிருந்து மீண்டு... *2016 TNPSC Group-4* தேர்விற்காக தயாரானேன்... நல்ல நண்பர்கள் உதவியுடன் ஓரளவு நன்றாகவே படித்தேன்... இப்போதும் தேர்வு முடிந்து எனது வினாத்தாளை Tentative Key உடன் ஒப்பிட்டு பார்க்கையில் 178/200 சரியான வினாக்கள்... என் நண்பர்கள் எனக்கு அரசுப்பணி உறுதியாக கிடைத்து விடும் என்று கூறினர்... நானும் நம்பினேன்... ஆனால் கிடைத்தது ஏமாற்றமே... அந்த தேர்வு முடிவில் 181/200 எனது சாதிப்பிரிவில் கட்ஆப்... மீண்டும மனமுடைந்தேன்... அதிலிருந்து மீண்டு அடுத்த தேர்விற்கு படிக்கும் எண்ணமே எழவில்லை... 

பின் மனதை தேற்றிக்கொண்டு நண்பர்கள் உதவியுடன் தொடர்ந்து படித்தேன் *2017 Postal* தேர்வில் *தேர்ச்சி அடைந்தேன்* (தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1 பணியிடத்தில்) வெற்றி விரைவாக கிட்டியதே என எண்ணி மகிழ்வதற்குள் அந்த தேர்வில் ‌அரியானா மாநிலத்தை சேர்ந்த சில நபர்கள் தமிழில் 25/25 எடுத்துள்ளதாகவும்.. தேர்வில் குளருபடி எனவும் அந்த தேர்வை ரத்து செய்தது தேர்வு வாரியம்...  இது எனக்கு பேரிடியாக இருந்தது...

பின் *2017 TNPSC Group -2A* தேர்வினை அறிவித்தது... படிக்க முடிவெடுத்து களமிறங்கினேன்... ஆனால் நான் உதவியாளராக பணிபுரிந்த பயிற்சி மையத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது குடும்ப சூழலால் அதனை ஏற்றேன்... எனக்கோ சிறு வயது ஆனால் நான் குறைந்தது (400-450 நபர்களை தினசரி எதிர்கொள்ளும் பொறுப்பில் இருந்தேன்) 
இதில் எனது கவனத்தை செலுத்தியதில் *GROUP 2 A* .. தேர்வில்‌ 149 வினாக்கள் சரியாக போட்டிருந்தேன் முடிவுகள் தாமதமாகியது.... 

பின் *Tamilnadu Housing Board தேர்வு 2017* இறுதியில் அதில் 0.5 மதிப்பெண்ணில் பணியை தவிர விட்டேன்... நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது... அதிர்ஷ்டம் இல்லை என அலுத்து கொண்டேன்... 

பின் *2018 GROUP 4* தேர்வு... நான் பணிபுரிந்த பயிற்சி மையத்திற்கு நம்பி வந்த நபர்களுக்காக‌‌ கூடுதலாக உழைத்தேன்... கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் வகுப்புகளை எடுத்தேன்... வினாத்தாள் தயார் செய்தேன்... வாரத்தில் 5 நாட்கள் பணி,  இரண்டு நாட்கள் படிப்பு என தொடர்ந்தேன்... தீபாவளி, பொங்கல் எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை... தொடர்ந்து படித்தேன்... பயிற்சி மையத்திற்கும் எனது உழைப்பை கொடுத்தேன்... ஆனால் தேர்வு முடிவு வேறு மாதிரியாக இருந்தது மீண்டும் 1 மதிப்பெண்ணில் வேலை கிடைக்கவில்லை... 

இதற்கு வருத்தப்பட்ட வேளையில்... நான் பணிபுரிந்த பயிற்சி மையத்தில் 100 நபர்களைக்கு மேல் தேர்ச்சி பெற்று அரசுப்பணியை அலங்கரித்தனர்...‌ இதில் எனது பங்கும் இருப்பதை எண்ண பெருமைபட்டேன். எனக்கு அவர்களை மற்ற  மாணவர்கள் முன் அறிமுகப்படுத்தி பேசும்போது.. நானே வெற்றி அடைந்த ஆனந்தம்... ஆனால் நான் வெற்றி பெறவில்லை என்ற விமர்சன கணைகளும் என்னை துளைக்காமல் இல்லை.... 

பின் *2018 TNPSC GROUP I - PRELIMS* தேர்வில் வென்றேன்... இது TNPSCல் எனது முதல் வெற்றி... மெயின்ஸ் படிக்க எண்ணமிருந்தும் பணமில்லை... பார்க்கும் வேலையை விட்டு சென்று படிக்கும் தைரியமும் இல்லை... சென்னை செல்ல எனக்குள் இருந்த பயமும் ஒரு காரணம்... அதுவரை சென்னை சென்றதில்லை... மெயின்ஸ் எழுதவில்லை...

அப்போதுதான் வந்தது *TNPSC GROUP 4, 2018* இந்த முறை GROUP I PRELIMS ல் வெற்றி பெற்ற தன்னம்பிக்கை வேறு... எனவே நன்றாக திட்டமிட்டு படித்து கொண்டிருந்தேன்.‌‌... படிப்பும் சிறப்பாக சென்றது... 

அன்றைய நாளில் நண்பர்கள் இணைத்து 10ம்‌ வகுப்பு தமிழ் மற்றும்‌‌ அரசியலமைப்பு படித்து கொண்டிருந்தோம்... ஒரு அலைபேசி வந்தது‌... எடுத்து பேசினேன்... அந்த பக்கத்தில் எனது அப்பாவிற்கு நெஞ்சுவலி எனவும் இது முதல் *Cardiac Arrest* எனவும் தெரிவித்தனர்... விரைந்து சென்று மருத்துவமனைகளில் விசாரித்து‌ அட்மிட் செய்வதற்குள்.‌‌.. மருத்துவர் தெரிவித்தது ஏற்கனவே முடிந்து விட்டது... *உயிர் இல்லை* என...😓 

எனக்கு வாழ்வே இருள் சூழ்ந்தது... 
அடுத்து வாழ்வில் என்ன செய்ய போகிறோம்... வீட்டில் உள்ளவன்களை எப்படி தேற்ற போகிறோம் என வருத்தத்தில் ஆழ்ந்தேன்... படிக்க பக்கத்தில் புத்தகம் இருந்துத ஆனால் அம்மா அழுவதை பார்த்து படிக்க மனமில்லை... அப்படியே நாட்கள் கடந்தன... அப்பாவிற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு... மீண்டும் படிக்க முடிவெடுத்து தொடங்கினேன்... தேர்விற்கு இருபது நாட்களே இருந்துது... சரிவர திருப்புதல் செய்ய முடியவில்லை... தேர்வு நாள் நெருங்கியது... பயம் அதிகமானது இதை படிக்கவில்லை, அதை படிக்கவில்லை என புதிது புதிதாக படித்தேன்... பதட்டம் அதிகரித்து... அதிலேயே தேர்வு எழுதினேன்.‌‌ தேர்வு முடிந்த கையோடு வினாத்தாளை‌ சரிபார்த்தேன்... 158 வினாக்கள் மட்டுமே வந்தது... இதற்கு பணி கிடைக்காது என தெரியும்... மனமுடைந்து அழுதேன்... பல தவறான எண்ணங்கள் தோன்றின.. தனிமை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது... ஆனால் அந்த நேரம் எனது நண்பர் *திரு.விக்னேஷ்* உடன் சிறிது நேரம் பேசினேன். மனதில் உள்ள எண்ணங்களை நீக்கி எனக்காக உள்ளவர்களை மனதில் எண்ணி என்னை நானே தேற்றிக்கொண்டேன்...

பின் *2017 GROUP 2 A* தேர்விற்கான கலந்தாய்வினை TNPSC தொடங்கியது... முதல் முறை ஆன்லைன் மூலம் சான்றிதழ் பதிவேற்றததை அரசு இ-சேவை‌ மையம் மூலம் TNPSC செய்திருந்துது 
ஆச்சர்யம் என் பெயரும் இருந்தது... தினசரி 200 (காலை-100, மாலை-100) என கலந்தாய்வு தொடங்கியது..
அதில் பணி கிடைத்து விடும் என நம்பினேன் 48 நாட்கள் கலந்தாய்வின் முடிவில் நான் சார்ந்த சாதிப்பிரிவில் PSTMல் 20 பணியிடங்கள் இருந்து. நான் செல்ல வேண்டிய நாளுக்கு இடையில் ஒரே ஒரு நாள் மட்டும் இருந்தது. அதில் மட்டும் ஒரு பணியிடம் மீதமிருந்தாலும் எனக்கு பணி கிடைத்துவிடும் என நம்பிக்கையுடன் இருந்தேன்... அன்று மாலை Vacancy Position பார்த்த எனக்கு பேரிடி.. 0 Vacancies... மனமுடைந்து வீட்டிற்கு போன் செய்து அம்மாவிடம் கதறி அழுதேன்.. பின் மனதை தேற்றிக்கொண்டு அம்மாவையும் தேற்றினேன். அதிலிருந்து மீண்டேன். 

பின் 2018 இறுதியில் *TNPSC Group 2 Interview posts* ... தேர்விற்கு பணிபுரிந்து கொண்டே படித்தால் முடியாது என மிக முக்கியமான துணிவான முடிவை எடுத்தேன்... 
வேலையை விட்டுவிட்டு படிக்க தொடங்கினேன். என் அப்பாவிற்கு EPFO லிருந்து கொடுத்த 1.4 லட்சம் தான் எனது கடைசி முதலீடு... நல்ல நண்பர்கள் இணைந்தனர். படித்தேன்... நன்றாக திட்டமிட்டு படித்தேன்...‌ அப்போது தான் *தமிழ்நாடு வனத்துறையில் வனவர்‌ மற்றும் வனக்காப்பாளர் தேர்வு- 2018* அறிவிப்புகள் வெளியானது. நான் எனது நண்பர் திரு.விக்னேஷ் உடன் இணைந்து சிறப்பாக படித்தோம்... 
குரூப் 2 Preliminary தேர்வில் 156 Cut-off நான் 168 வினாக்கள் சரியாக போட்டிருந்தேன். பின் எனக்கு முன் வனத்துறை தேர்வா இல்லை Group 2 Interview post ஆ‌ என இரண்டு வாய்ப்புகள் இருந்தது. நான் வனத்துறையை தேர்வு செய்தேன் தேர்வும் நன்றாக எழுதினேன். 

முதலில் *Forest Gurard 2019* முடிவுகள் வெளியானது அதில் 1:3 ல் தேர்வானேன். பின் GROUP 2 Preliminary results வெளியானது... அதில் தேர்ச்சியும் பெற்றேன்... ஆனால் வனத்துறை Physical Test ல் (25 Km in 4 Hours) தேர்ச்சி பெற கடினமாக பயிற்சி செய்தேன்... மற்றவர்களுக்கு இந்த இலக்கு எளிதாக தோன்றலாம் ஆனால் நான் உடல் எடை அதிகம்...  இதில் தேர்ச்சி பெறுவதெல்லாம் அதிசயமாக இருந்தது... அந்த நாளும் வந்துது. என் கடின பயிற்சி கைவிடவில்லை (25 கி.மீ தூரத்தை 3 மணி 51 நிமிடத்தில் முடித்தேன்)....

தேர்வு முடிவுகள் சில நாட்களில் வந்துது அதிலும் என் துரதிருஷ்டம் என்னை விடவில்லை. எனது சாதிப்பிரிவில் 119‌வது நபர் வரை தேர்ச்சி பெற்று பணி கிடைத்து. எனது வரிசை எண் 121 அப்போதும் கிடைக்கவிலலை... இப்போது எனக்கு தோல்வி பழகி போயிருந்து... இந்த தோல்வி பெரிதாக தெரியவில்லை. 

படித்தேன்... மெயின்ஸ் தேர்விற்கு... அப்போது தான் *Forester 2019* முடிவுகள் வெளியானது... ஆச்சர்யம் என்னை நேர்காணலுக்கு அழைத்து இருந்தனர்... கலந்து கொண்டேன் பெருமையாக இருந்தது. முதல் முறையாக Shoe, Belt, Tuck in... என‌ எனக்கே என்னை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது... 
நேர்க்காணலை நன்றாகவே முடித்தேன்... 
யோசித்தேன் இதுவும் கிடைக்காது... ஓரிரு மதிப்பெண்ணில் போய்விடும் என்று...

இங்கு தான் கடவுள் வைத்தான் Twist... ஏப்ரல் 2019 தேர்வு முடிவு வெளியானது... பதட்டத்துடன் பார்த்தேன். என் நம்பர் ரிசல்ட் இல் இருந்தது... எனக்கு அழுகை தான் வந்தது... இவ்வளவு தோல்விகளுக்கு பின் *முதல் வெற்றி* ... இது பெரிதாகவே தெரியவில்லை... நான் அப்போது ஒரு மனப்பக்குவத்திற்கு வந்தேன்... *4 1/2 வருட* போராட்டம் முடிவுக்கு வந்தது. தேர்ச்சி பெற்றேன்.... *மே 5, 2019* நான் ஆசைப்பட்ட அரசுப்பணியில் இணைந்தேன்... 

பின் மேலும் பல ஆச்சர்யங்கள் காத்திருந்தது... *2019 Assistant Jailor* தேர்வில் (மொத்தம் 16 பணியிடங்கள்) *மாநில அளவில் 10ம்‌‌ இடம்* ... ஆனால் அதற்கான நேர்காணலில் நான் கலந்து கொள்ளவில்லை... ஏனெனில் எனக்கு அதை விட கூடுதலான சம்பளத்தில் அப்போது பணிபுரிந்தேன். நண்பர்கள் கலந்து கொள்ள கூறினர். இன்னொருவரின் வாய்ப்பை பறிக்க மனமில்லை... பின அடுத்த‌ இரண்டு Group -1 தேர்விலும் Prelims தேர்ச்சி பெற்றேன்... பணி சூழலினால் Mains எழுதவில்லை...இடையில் ரயில்வே தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றேன்... பணியில் இணையவில்லை.

அன்று 2017ல் குரூப் 4 பதவி கிடைத்திருந்தால்‌ இன்று நான் வாங்கும் சம்பளத்தை பெற 20 ஆண்டுகள் ஆகியிருக்கும். 
இதன் மூலம்  நூழிலையில் அரசுப்பணியை தவற விட்டவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது... தன்னம்பிக்கையோடு போராடுங்கள்.... சிறிய பதவியல்ல... பெரிய பதவி உங்களுக்காக காத்திருக்கிறது... 

தாமதமாவது நன்மைக்கே!!!! பின் வாங்காமல் போராடுங்கள்... வெற்றி நமதே!!!! 

எனது எல்லா சூழலிலும் எனக்கு உறுதுணையாக இருந்த எனது சொந்தங்களுக்கும், ஜெய்குருதேவ் பயிற்சி மையத்தின் பயிற்றுநர்களுக்கும், அனைத்திற்கும் மேலான எனது நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏

நேரம் செலவிடுட்டு என் போட்டித்தேர்வு வாழ்க்கை கதையை படித்ததற்கு நன்றி இது உங்களுக்கு ஒரு உந்துகோலாக இருக்கும் என நம்புகிறேன்... 
வாழ்த்துக்களுடன்.

இர.விவேகானந்தன்,
வனவர், (வனப்பிரிவு‌‌ அலுவலர்)👮🏻‍♂️
தமிழ்நாடு வனத்துறை. 🌱
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post