Title of the document
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேச்சே இல்லை... அரசு ஊழியர்களின் நிலை என்ன?




மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பழைய ஓய்வதிய திட்டம் குறித்து இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


இது அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் வழங்கப்படும் என்று திமுக சொன்னது எப்போது வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தாமதம்?

புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்களை மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. இதையொட்டி, கடந்த பிப். 28ஆம் தேதி, பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்கள் விவரங்களை சேகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அரசின் சுற்றறிக்கை ஒன்றும் வெளியானது.


ஆனால், இதுகுறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகவில்லை. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், அறிவிப்புகள் தாமதமாகலாம் என கூறப்படுகிறது. ஆனால், அரசு ஊழியர்களுக்கு பயனளிக்கும் அறிவிப்பையைும் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.

வீடு கட்ட முன் பணம் அதிகரிப்பு

அதாவது, அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூ. 40 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்திற்கொண்டு இத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டித்தரப்படும் என்றும், வரும் நிதியாண்டில் இதற்காக ரூ. 100 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post