Title of the document

 ஆசிரியர் சமுதாயம் எப்போது ஒன்றுபடும்?

பள்ளியில் சென்று ஆசிரியர்களை தாக்கியது போல் ஒரு காவல்நிலையத்தில் சென்று காவலர்களையோ அல்லது நீதிமன்றத்தில் சென்று நீதிபதிகளையோ வழக்குறைஞர்களையோ அல்லது மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களையோ, அல்லது ஒரு செய்தி சேனலின் செய்தியாளரையோ தாக்கியிருந்தால் இந்நேரம் தமிழ்நாடு முழுவதும் அந்த சம்பவம் வேறுமாதிரி கையாளப்பட்டிருக்கும்..

ஆனால் ஆசிரியர் சமூகம் தானே அதனால் தான் என்னவோ செய்திதாள்களில் கடைசி பக்கத்தில் வரும் முக்கிய செய்தி போல கேட்பார் அற்ற நாதியற்ற சமூகம் போல் ஆசிரியர் சமுதாயம் ஆகிவிட்டது..

அன்று தனியார் பள்ளியில் ஒருமாணவன் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தியபோதே ஒட்டுமொத்தமாக போராடி பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற போராடியிருந்தால் இந்நேரம் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருக்காது.

இங்கு எல்லாமே யாரோ ஒருவருக்குத்தான் நமக்கில்லை என்று கடந்து போகும் மனநிலைதானே எல்லோருக்கும் உள்ளது. போராட்டமாகட்டும் அல்லது கோரிக்கைகள் ஆகட்டும் நமக்கில்லை என்ற மனநிலையில் தான் எல்லோரும் கடந்து செல்கிறோம்.

ஆனால் ஒன்றை மட்டும் எண்ணிக்கொள்வோம் இன்று அப்பள்ளியில் நடைபெற்றது நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இனியாவது வகுப்பறையில் வாய்மூடி மவுனம் காக்காமல் ஒவ்வொன்றிற்கும் எதிர்த்து குரல்கொடுப்போம், கற்பித்தல் பணியை செய்ய வந்தவர்களை டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர்களாக மாற்றிய போதே கேட்க துணிவில்லாமல் இருந்தோம், இனியாவது ஒற்றுமையை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் ஒற்றுமையாக இருப்போம்.

இதுவே முற்றுப்புள்ளியாக இருக்கும் வகையில் அனைத்து இயக்கங்களுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அழுத்தம் கொடுப்போம்..


                                                             - அரசு பள்ளி ஆசிரியரின் பதிவு

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post