“ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டத்தை” இயற்ற கோரிக்கை!!
தூத்துக்குடி மாவட்டம்,புதூர் ஒன்றியம்,கீழ நம்பிபுரம் கிராமத்தில் உள்ள இந்து ஆரம்பப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் திருமதி. குருவம்மாள்,திரு. பரத் ஆகியோர் மீது இன்று(21.03.2023) அப்பள்ளியில் இரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவனின் பெற்றோர் நடத்திய கண்மூடித்தனமான, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரும் கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
"எழுத்தறிவித்தவன் இறைவன்" ,"மாதா பிதா குரு தெய்வம்" என்று ஆசிரியர்கள் மதிக்கப்பட்ட தமிழகத்தில் ,ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி போதிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை பள்ளி வளாகத்தில் புகுந்து மாணவனின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் , சொல்ல இயலாத வசைச்சொற்களை சொல்லியபடி கைகளாலும் செருப்புகளாலும் அடித்து தாக்குவது என்பது இந்த சமூகம் மீண்டும் பன்னெடுங்காலம் பின்னோக்கி செல்கிறதோ என்கின்ற கவலையை ஏற்படுத்தி, எழுத்தறிவிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சொல்லனா துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக நீதிக்கு புறம்பாக அத்துமீறலில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவனின் உறவினர்களை உடனடியாக காவல்துறை மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது வன்மையான கண்டனங்களையும் அதிருப்தியையும் தார்மீக ரீதியான கோபத்துடன் பதிவு செய்கிறது
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை இனிவரும் காலங்களில் எந்த ஒரு ஆசிரியர் மீதும் யாரும் தாக்குதல் நடத்தா வண்ணம் ,அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது
அதே வேளையில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் தேவை என்ற ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இது போன்ற தொடர் சம்பவங்கள் வலு சேர்க்கின்றன. எனவே தமிழக அரசு ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்து நிறைவேற்ற வேண்டும் என கல்வி அமைச்சரை வாயிலாக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறது
செ. முத்துசாமி ExMLC
பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

________________________________________________________________________
தூத்துக்குடி மாவட்டம் , புதூர் ஒன்றியம் , நம்பிபுரம் கிராமத்தில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் திருமதி.வி.குருவம்மாள் மற்றும் திரு.ரா.பாரத் ஆகியோர் மீது , 21.03.2023 அன்று அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் பெற்றோர் சிவலிங்கம் அவரது மனைவி செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனுசாமி உள்ளிட்ட பலர் கூட்டாக சேர்ந்து,
அநாகரிகமாக பண்பாடில்லாமல் மனித மிருகம் போல கையாலும் , செருப்பாலும் அடித்து காயப்படுத்தி கொடுர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . " மாதா , பிதா , குரு , தெய்வம் ” என்று ஆசிரியரை தாய் , தந்தைக்கு அடுத்த இடத்தில் வைத்து அழகு பார்த்த பண்பாடு நிறைந்த இனம் நம்முடைய திராவிட இனம் . இத்தகைய மூன்றாம் இடத்தில் வைத்து அழகு பார்த்தவர்களை அசிங்கப்படுத்தி , கேவலப்படுத்தும் பண்பாடற்றச் செயலை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை பெற்றுத்தந்த இந்த அரசு , இதில் முனைப்போடு கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று " அடியக கேட்டுக் கொள்கிறேன் . நடக இனி பள்ளிகளில் தாக்குதல் நடைபெறாமல் ஆசிரியர்களை பாதுகாக்க , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு கவனம் எடுத்து , வருகின்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரிலேயே “ ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டத்தை ” இயற்ற வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தமிழக அரசையும் , கல்வித்துறையையும் கேட்டுக் கொள்கிறேன்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment