Title of the document

பதவி உயர்வுக்கும் TET தேவை - அரசும் , சங்கங்களும் என்ன செய்யப் போகின்றன ?

அண்மையில் பெரும்பான்மை  ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் மாண்பமை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்புக்குப் பின் நமது மாண்புமிகு கல்வியமைச்சசர் அவர்கள் இதன் மேல் முறையீடு செய்யப்படும் எனப் பேட்டியில் கூறியிருந்தார்கள். இதன் முக்கியத்துவம் கருதி எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் தாமாகவே முன்வந்து ஆசிரியர் மனம் அறிந்து ஆசிரியர்கள் நலன் காக்க மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார்கள்.

சரி இதனால் என்ன பயன் என்று பார்ப்போம். 2003 க்கு
முன்னரெல்லாம் இடைநிலை ஆசிரியர்கள் 1 முதல் 8ம் வகுப்பு வரை பணியில் அமர்த்தப்பட்டனர். (தொடக்க, உயர்நிலை, மேல்நிலை) என அனைத்து தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் போதிய பாடப்பொருளறிவு வேண்டும் என 6, 7, 8 வகுப்புகளில் நியமனம் செய்யப்படவில்லை. சங்கங்களும் அதை பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டனர். பின்னர் பதவி உயர்வுக்கு தகுந்த கல்வித் தகுதியுடையோர்க்கு சங்கங்களின் முயற்சியால் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் அதே சங்கங்கள் Tet தேர்ச்சி வேண்டும் எனும் போது யாரும் அதிகம் வாய்திற்ந்ததாக தெரியவில்லை. Tet தேர்ச்சி கட்டாயம் என்றால் அனைத்து சங்க உறுப்பினர்களிலும் 99% பேர் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும். இடைநிலை ஆசிரியர் ஆயுள் முழுவதும் இடைநிலை ஆசிரியராகவே இருப்பார். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் சென்றால் தான் தலைமை ஆசிரியர் பணியிடம் ஏற்படும். வருகிற காலத்தில் தொடக்க, நடுநிலை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர் பணிக்கும் தேர்வு எனும்  நிலையும் ஏற்படலாம். RMSA விரிவுபடுத்தப்படும் போது முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கும் Tet தேர்வு அவசியம் எனலாம். அப்போது அனைத்து ஆசிரியர் களுக்கும் பாதிப்பு ஏற்படும் போது உணர்ந்து என்ன பயன்?

மற்ற துறைகளை ஒப்பிடுகையில் கல்வித்துறையில் பதவி உயர்வு சொல்லும்படியில்லை. பிற துறைகளில் 10ம் வகுப்பு கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்த ஒருவர் Degree with துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர் தாசில்தார் வரை பதவி உயர்வு பெறலாம். அவரை கடினமான Group 2 எழுதச் சொல்வதில்லை. நமக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர் என்ன தகுதித் தேர்வு எழுதி வந்தார்? ஒன்றிய அரசின் இலக்கு 2030 க்குள் +2 முடித்த மாணவர்களில்  50% உயர் கல்வி பெற வேண்டும் என்பது. 

ஆனால் நம் தமிழ்நாடு எப்போதோ அந்த இலக்கை அடைந்து விட்டது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் நமது மாணவர்களும் ஆசிரியர்களும் எவ்வளவு முன்னேறியுள்ளனர் என்று . முன்னரெல்லாம் ஒரு ஆசிரியர் Selection Grade பெற்றால் தனியான ஊதிய விகிதமாக இருந்தது. எனவே பதவி உயர்வை யாரும் எதிர்பார்ப்பதில்லை.  ஆனால் தற்போது அப்படியில்லை. தொடக்கக் கல்வித்துறை மட்டுமின்றி உயர்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு இன்றியே 20 ஆண்டுகளைக் கடந்து விட்டனர். அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர் சங்கங்கள் மட்டுமின்றி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் குரல் கொடுப்பது ஆசிரியர் சங்கங்களிடையே ஒற்றுமை இருப்பது  கண்டு ஒவ்வொரு ஆசிரி யருக்கும் மகிழ்ச்சியே. அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கடமை.

பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அதற்குள் இதற்கொரு தீர்வு எட்டப்படாவிடில் பலரின் பதவி உயர்வு கனவு பறிபோகும் அபாயம் உள்ளது. மேலும் இதை நடைமுறைப்படுத்தினால்  பல்வேறு வினாக்கள் சட்ட சிக்கல்கள் ஏற்படும் . மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தான் பெற முடியவில்லை. அரசுக்கு அதிக நிதி இழப்பு ஏற்படாத இதற்காவது வழி ஏற்படுத்தலாமே. இதற்கு ஒரே தீர்வு முன்னர் 2010ல் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு Tet தேர்வில் விலக்கு அளித்தது போல் தற்போது வரை பணியில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும்  ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கு Tet தேர்விலிருந்து விலக்களிக்க ஆவண செய்ய வேண்டும்.

இது அனைத்து சங்கங்களின் கடமையாகும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post