Title of the document

அரசு பள்ளி மாணவர்கள் 15% கற்றலில் பின்தங்கியுள்ளனர் - மீண்டும் Bridge Course பயிற்சி அளிக்க முடிவு !!




அரசு பள்ளிகளில் 4, 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் எழுத, படிக்க தெரியாமல் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கற்றலில் பின்தங்கிய அம்மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரம் பிரத்யேக பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்க தொடக்கக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) இயக்குநர் கடிதம் ஒன்றுஅனுப்பியிருந்தார். அதன்படி, கரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதை அடுத்து மாணவர்களிடம்கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. இதை சரிசெய்ய அடிப்படை திறனாய்வு மதிப்பீட்டு தேர்வு 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அதில் 4, 5-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் 1-ம் வகுப்பு கற்றல் நிலையில் இருக்கின்றனர்.

இம்மாணவர்கள் மொழி பாடத்தில் முழுமையாக எழுத்துக்களை அறியாததால் எழுதவும், வாசிப்பதற்கும் சிரமப்படுவதாகவும், எண்மதிப்பு அறியாததால் கூட்டல் கழித்தல் போன்ற அடிப்படை கணக்குகளை செய்ய இயலாத நிலையிலும் உள்ளனர். இதையடுத்து 1-ம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி வழங்கப்பட வேண்டும்

இதற்கான பயிற்சி கையேடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடிப்படை எழுத்து மற்றும் எண்கள் அறியாத மாணவர்களுக்கு அவற்றை கற்பதற்கான வாய்ப்பு அமையும். எனவே, நடப்பு 2-ம் பருவத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பள்ளிகளில் இந்த பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சியை வழங்கிட வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து எஸ்சிஇஆர்டிஇ அறிவுறுத்தலின்படி அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு கற்றல் நிலையில்உள்ள 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சியை அமல்படுத்தி கற்றல்அடைவை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமும் பள்ளி வேலை நேரத்தில் அரை மணி நேரம் கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்க வேண்டும். இதுசார்ந்து அனைத்து அரசு, அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உரியஅறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post