How to Dowload Patta, Chitta, FMB in Tamil / பட்டா, சிட்டா, புல வரைபடம் பதிவிறக்கம் செய்வது எப்படி? (eservices.tn.gov.in)
How to Dowload Patta, Chitta, FMB in Tamil / பட்டா, சிட்டா, புல வரைபடம் பதிவிறக்கம் செய்வது எப்படி? (eservices.tn.gov.in) |
தமிழ்நாட்டில் நிலம் வாங்கும் போது உரிமையாளரின் கீழே உள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்த்து பின்பு நிலம் வாங்கவும் :
- பட்டா சிட்டா எண்,
- நிலத்தின் வரைபடம் (FMB Sketch) மற்றும் அளவு
- உரிமையாளரின் பெயர்,
- நிலம் எந்த ஊர் சார்ந்தது,
- எந்த வகை நிலம் சார்ந்து (நஞ்சை அல்லது புஞ்சை நிலமா)
- என்று இணையதள மூலமும் https://eservices.tn.gov.in/ மற்றும் நேரடியகவும் சரிபார்த்துக்கொள்ளவும்,
- மனைக்கார் (VAO), தாசில்தார் அலுவலகம் (Tahsildar Office), சார்பதிவாளர் அலுலவகம்
- (Register Office),வில்லங்கச் சான்று விவரம் (EC) சரிபார்த்து பின்பு அந்த
- நிலத்தை வாங்கவும்.
இப்போது உங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, புல வரைபடம் Dowload செய்வது எப்படி என்று பார்ப்போம்.
How to Dowload Patta, Chitta, FMB in Tamil :
- முதலில் கீழ் உள்ள Link ஐ Click செய்து உள்ளே செல்லுங்கள். https://eservices.tn.gov.in/eservicesnew/home.html
- இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் கிடைக்கிறது,இதில் ஏதாவது ஒன்று தேர்வுசெய்யவும்
- பட்டா / சிட்டா விவரங்களை பார்வையிட என்பதை (கிளிக் செய்யவும்) தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து அதில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள்..
- அதில் அடுத்து கிராமப்புறம்/ அல்லது நகர்ப்புறம் என்பதை தேர்வு செய்யுங்கள்..
- அடுத்து அதில் உங்கள் வட்டம் மற்றும் கிராமத்தை தேர்வு செய்யுங்கள்..
- அடுத்ததாக பட்டா எண் தெரிந்தால் பட்டா எண்ணை பதிவிடுங்கள் அல்லது சர்வே எண்ணை பதிவிடுங்கள்..
- சர்வே எண்ணை பதிவிட்டவுடன் சரியான உட்பிரிவு எண்ணை தேர்ந்தெடுங்கள்..
- அடுத்து பட்டா சிட்டா, புல வரைபடம் இதில் எது வேண்டுமோ? அதைதேர்ந்தெடுங்கள்...
- அடுத்து அதில் உள்ள கேப்சாவை உள்ளிடுங்கள் பின் சப்மிட் பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் உங்களுக்கு தேவையான பட்டா சிட்டா, புல வரைபடம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Post a Comment