🔥 *குமுறும் ஆசிரியர்கள்... கல்வித்துறை கவனிக்குமா?* 🔥
ஆசிரியர்கள் மீதான மனித உரிமை மீறல் நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கைகளை ஆசிரிய சங்கங்கள் எடுக்காதது ஏன்? குடிநாயகத்தின் தூண்கள் என அழைக்கப்படுகின்ற அனைத்து உறுப்புகளும் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் அனைவரையும் பொத்தாம் பொதுவாக வன்மத்தோடு பார்ப்பதும், இழிவுபடுத்துவதுமான செயல்களைத் தொடர்ந்து செய்துவருகின்றன. வழக்குக்குத் தொடர்பில்லாத மிரட்டல், அனைத்து சனிக்கிழமையும் வேலை நாள்கள், மே மாதம் தேர்வு, விடைத்தாள் திருத்தும் பணி முடிந்ததும் அடுத்த கல்வி ஆண்டு பள்ளி திறப்பு என மூச்சு விட முடியாத அளவிற்கு ஆசிரியர்கள் மீது உச்சகட்ட மனித உரிமை மீறல்கள் ஏவப்படுகின்றன. அத்தனைக் கொடுமைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு, மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்பது போல் தேர்தல் கட்சி சார்புடன் சங்கங்கள் இயங்குவது வேதனையாக உள்ளது. தீந்தொற்று விடுமுறையைக் காரணம் காட்டி ஆசிரியர்களைக் கொடுமைபடுத்துவது எந்த வகையில் அறமாகும்? வங்கியில் வேலை பார்ப்பவர்களுக்குக்கூட இரண்டு வாரம் சனிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது. அதுகூட ஆசிரியர்களுக்குக் கிடையாது. பிற பணியாளர்களுக்கு இருப்பது போன்று ஒரு மணி நேர அனுமதிகூட ஆசிரியர்களுக்குக் கிடையாது. மின் கட்டணம் கட்டுதல், வங்கிப் பணிகள் போன்றவற்றிற்கு அலுவலர்கள் அலுவலக உதவியாளர்களைப் பயன்படுத்துவது போல ஆசிரியர்கள் பயன்படுத்த முடியாது. மாறாக அலுவலக உதவியாளர்கள், துப்புறவுப் பணியாளர், காவலர், எழுத்தர், தண்ணீர் வைப்பவர் அனைத்தையும் பள்ளிகளில் செய்பவர்களாக ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆசிரியர்கள் மீதான வன்மப் பார்வைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் மணி கட்டியே ஆக வேண்டும்! இல்லை என்றால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கு ஏற்படும். ஆசிரிய சங்கங்கள் தேர்தல் கட்சி எல்லையைக் கடந்து, தொழிற்சங்க எல்லைக்கு நகரவேண்டும்! நிதிக் கோரிக்கையை மட்டுமே முன்னெடுக்கும் நிலையை மாற்றி, மானத்தையும், உரிமைகளையும் காக்கப் போராட்டத்தை எடுக்க முன்வர வேண்டும்! -
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment