Title of the document

தமிழ் வழியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு..!! 




தமிழ் வழியில் படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து ஜனவரி 20க்குள் ஆன்லைனில் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.


இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனரக இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வழியில் படிக்கும் 12 மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்களுக்கும் தேர்வு கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் எம்.பி.சி, பட்டியல் இன மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. பெற்றோர் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான பி.சி. மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் உண்டு எனவும் சுயநிதி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post