Title of the document
📌❄️💥❄️💥📌 *இன்றைய 21.10.2021 பள்ளிக்கல்வித்துறை ஆணையர் கூட்ட விபரம்*


📌 *கூட்டத்தின் கருப்பொருள் "இல்லம் தேடி கல்வி" ---20 மாதங்களுக்கு பின்னர் மாணவர்கள் பள்ளிக்கு வர இருப்பதால் மாணவர்கள் கற்றலை சிறப்பிக்க ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் நோக்கி மட்டுமே கூட்டம் முழுவதும் நகர்ந்தது பிற கருத்துக்கள் பேசப்படவில்லை.*



📌 *சில நாட்களாக ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சையாக இருந்த பூஜ்ஜிய கலந்தாய்வு ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக நடத்தப்பட மாட்டாது பழைய நடை முறையிலேயே கலந்தாய்வு நடைபெறும். ஒரே ஒரு மாற்றம் மட்டுமே பொது கலந்தாய்வில் இருக்கும், வட மாவட்டங்களுக்கு கல்வியில் பின் தங்கிய ஒன்றியங்களுக்கு தன் விருப்பமாக ஆசிரியர்கள் மாறுதல் பெற்று மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தால் அவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும் என்ற ஒன்று மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செய்திகளை நம்ப வேண்டாம் என கூட்ட துவக்கத்திலேயே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் மதிப்பிற்குரிய பள்ளி கல்வித்துறை ஆணையர் அவர்கள்.*


👍🏻👍🏻 *மாணவர்கள் நலன் சார்ந்து நமது SSTA -2009& TET ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்*



💢 *ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் விதமாக இல்லம் தேடி கல்வித்திட்டம் ஒரு போதும் இருக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.*



💢 *"இல்லம் தேடி கல்வி" என்ற இந்த புதிய திட்டத்தினை காலை 8 மணிக்கு தொடங்கி ஒன்பது மணி வரையிலும் அதன் பின்னர் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி பள்ளிகளைத் துவக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.*



💢 *EMIS வலைதளத்தில் பள்ளி மாணவர்கள் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்ந்து அனைத்து விவரங்களும் ஒரே நேரத்தில் சேகரிக்கப்பட்டு விட்டது மீண்டும் மீண்டும் இது சார்ந்த பல்வேறு பணிகளை தொடர்ச்சியாக ஆசிரியர்களுக்கு வழங்கி பள்ளியிலே முழுமையாக மாணவர்களுக்கு கற்றல் பணியினை செய்ய முடியாத நிலையை மாற்றி தர வேண்டும் என மிக அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது.*



👍🏻👍🏻 _*மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் உடனடியாகவே இந்த கோரிக்கை ஏற்கப்பட்டது இன்னும் ஆறு மாதத்திற்குள்ளாகவே அனைத்து பதிவேடுகள் சார்ந்த சுமைகள் ஆசிரியர்களுக்கு குறைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.*_



💢 *தொடக்க,நடுநிலை உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் மூலமாக கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.*



💢 *பள்ளிகள் திறந்து இரண்டொரு மாதத்திற்கு பின்பு அனைத்து வகை மாணவர்களுக்கும்  ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் தொடங்கி ஏழை மாணவர்கள் சிறப்பாக ஆங்கிலம் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.*



💢 *நவம்பர் 1-ஆம் தேதி பள்ளி திறக்கும் நாளை வெகு சிறப்பாக கொண்டாட மாணவர்களுக்கு இனிப்புகளும், பரிசுகளும் வழங்க அரசு முன்வந்து அதற்கான நிதியை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.*



💢 *குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க சட்டத்தினை கடுமையாக்கி அவர்களை வைத்து வேலை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை அரசு  எடுக்கும் என்ற அரசாணையை மீண்டும் அனைத்து சமூக வலைதளங்களிலும், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி வாயிலாகவும் வெளியிட வேண்டுமாய் வலியுறுத்தப்பட்டது.*



💢 *கூட்டத்தில் எழுப்பட்ட சந்தேகங்களும் அதற்கான கல்வித்துறை உயர் அதிகாரிகள் அளித்த விளக்கங்களும்*



💢 *எக்காரணம் முன்னிட்டும் ஆசிரியர்களின் முக்கியத்துவம் இத்திட்டத்தின் வாயிலாக குறைக்கப்படாது முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் SMC குழுவின்  மேற்பார்வையிலேயே இத்திட்டம் செயல்படுத்தப்படும்.*



💢 *பள்ளிகளுக்கு அருகில் தன்னார்வமாக செயல்பட விரும்பும் தன்னார்வலர்களான பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அதன் பின்னர் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும்.*



💢 *20 மாணவர்களுக்கு குறைவாக எண்ணிக்கையில் இருந்தாலும் ஒரு தன்னார்வலரை நியமித்துக் கொள்ளலாம், அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தாலும் 20 மாணவர்களுக்கு ஒருவர் என்ற  அடிப்படையில் தன்னார்வலர்களை கூடுதலாக நியமித்துக் கொள்ளலாம்.*



💢 *தமிழகத்தில்  32,000 தொடக்க,நடுநிலை பள்ளிகள்  உள்ளன  மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே இத்திட்டத்தினை செயல்படுத்திக் கொள்ளலாம். பள்ளிகள் இல்லாத கிராமங்களில் அவரவர்கள் சொந்த வசிப்பிடங்களில் பாதுகாப்பான அடிப்படை வசதிகள் இருக்கும் இடங்களில் நடத்திக் கொள்ளலாம்.*



💢 *கற்றலில் குறைபாடுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் ,அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் சேர்த்து கொள்ளப்படுவார்கள் இதில் எந்த பாகுபாடும் காட்ட வேண்டாம்.*



💢 *நன்றாக படிக்கும் மாணவர்கள் அவர்கள் விருப்பப் பட்டால் மட்டுமே கலந்து கொள்ளலாம் இல்லையெனில் தேவையில்லை.*



💢 *நமது பாடத்திட்டத்தினை சார்ந்து மட்டுமே இந்த திட்டத்தின் பாடப்பொருள் அமையும் பாடப்பொருளை மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக ஆடல் ,பாடல்கள்  விளையாட்டுகள் மூலமாக கற்றலை எளிதாக்கும் வகையிலும் முற்றிலுமாக இடைநிற்றலை குறைக்கும் நோக்கோடு இத்திட்டம் அமையப் பெறும்.*



💢 *பல்வேறு சங்கங்களின் சார்பில் தன்னார்வலர்களுக்கு வழங்கும்  ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.*



💢 *எந்த சூழ்நிலையிலும் பள்ளி நேரத்திற்குப் பின்பு ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட மாட்டார்கள் அவர்கள் தன்னார்வலர்களாக விருப்பப்பட்டால் மட்டுமே பணிபுரிந்து கொள்ளலாம் என கல்வித்துறை உயர் அதிகாரிகளால் விளக்கப்பட்டது.*



👍🏻 *_நமது "சம வேலைக்கு" "சம ஊதிய "வழக்கு சார்ந்த பதிவு நாளை பகிரப்படும்._*


          தகவல் பகிர்வு

✍🏻✍🏻 *மாநில தலைமை*

  🛡️🛡️ *SSTA-2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post