Title of the document
இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் தொடர்பாக தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரிடம்  தனி ஊதியம் ஆனது அகவிலைபடி கணக்கீட்டீருக்கும், ஆண்டு ஊதிய உயர்வுக்கும், ஈட்டிய விடுப்பு  சரண்டருக்கும், ஓய்வூதிய கணக்கீட்டீருக்கும் *கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நேரடியான வரிகள் உள்ள அரசாணையின் நகலை வழங்க வேண்டுமென்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது. அதற்கு கருவூல ஆணையரிடம் இருந்து தனியர் கோரிய தகவல் இவ்வலுவலகத்தில் இல்லை* என்று பதில் வழங்கியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி  ஊதியத்தின்  (personal pay) ஆறாவது ஊதியக்குழு மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2011 முதல் தனி ஊதியமாக ரூ.750/- வழங்கப்பட்டு வந்தது. *இந்த தனி ஊதியம் ஆனது ஆண்டு ஊதிய உயர்வுக்கும்,  அகவிலைப்படிக்கும், ஓய்வூதியத்திற்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.*

அப்பொழுதும் தனி ஊதியம் என்ற கலத்தில்  தனியாக தான் வைத்தார்கள். இந்த தனி ஊதியம் ஆனது ஏழாவது ஊதியக் குழுவின் மூலம் 1.10.2017 முதல் ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. 7வது ஊதிய குழு அரசாணையில் தனி ஊதியத்தை தனியாக வைக்க வேண்டும் என்று தான் உள்ளது. 

🔸 அகவிலைப்படி கணக்கீட்டிற்கு எடுத்துக் கொண்ட தனி ஊதியம் ஆனது தற்போது எடுத்துக் கொள்வதில்லை.

 🔸சில மாவட்டங்களில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, சில மாவட்டங்களில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

 🔸ஓய்வூதிய கணக்கீட்டிற்கும் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

🔸தனி ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறும் பொழுது, அந்த தனி ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். தற்போது பதவி உயர்வு பெறும் பொழுது இந்த தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன்  சேர்ப்பதில்லை.

🙏🙏🙏🙏🙏🙏🙏

அ.ஜெயபிரகாஷ்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
அரூர் ஒன்றியம்
தர்மபுரி மாவட்டம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post