*தமிழ்நாட்டு ஆசிரியர்கள், அரசுஊழியர்கள் & சங்கப் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு!*
கொரோனா பேரிடர் நிதியாக, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு *அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியமாக ரூ.150 கோடி வழங்குவதாக ஜாக்டோ-ஜியோ* அறிவித்துள்ளது. மகிழ்ச்சி.
இத்தோடே நில்லாது வருமானவரி செலுத்தும் நிலையிலுள்ளோர் தங்களால் இயன்றமட்டும் கூடுதல் தொகையைப் பிடித்தம் செய்து அளிக்க சார்ந்த சங்கங்கள் வழி முயற்சிக்கலாம்.
வருமானவரி செலுத்துவோர் அனைத்து சேமிப்புகள் & கழிவுகள் போக எப்படியும் *இம்முறை ஒன்றறை முதல் இரண்டு மாத ஊதியத்தை வருமான வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும்.*
அத்தொகையில் ஒருபகுதியை முன்கூட்டியே கொரோனா நிவாரண நிதியாக சார்ந்த சங்கங்களின் வழி (ரசீது பெற வேண்டி தனிநபர் பெயர்களில்) அளிப்பதால் பொதுமக்கள் மத்தியில் நம்மீதான பார்வையைச் சற்றே சீர்படுத்தலாம்.
கொரோனா காலத்திலும் சமூகத்தில் எழுந்துள்ள நம்மீதான பார்வையைச் சற்றே மாற்ற பெரிதாகத் தனித்த முதலீடெல்லாம் செய்யச் சொல்லவில்லை.
நாம் வழக்கமாகக் கட்டும் வரிக்கான தொகையின் ஒருபகுதியைச் சற்றே முன்கூட்டியே கட்டி 80G-ல் காட்டிக் கொள்வதோட சமூகத்தின் பார்வையிலும் ஒரு மாற்றத்தை விதைக்க இயலும் என நம்புகிறேன்.
இதை ஏன் சங்கமாகச் செய்ய வேண்டுமெனில். . . .,
தனிநபராகச் செலுத்தும் தொகையைச் சங்கங்களின் வழி தொகுத்து அளிப்பதால் பெருமொத்தத் தொகையை பொதுவெளியில் வெளியிடுவதோடே சங்கங்கள் மீதான சமூகப் பார்வையையும் நேர்மைறையாக ஈர்க்க இயலும்.
முயற்சிக்கலாமே!
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment