Title of the document
 *💫கல்விச்செய்திகள்🗞️*
*⚜️2052 சித்திரை 10 ~ 23.04.2021⚜️* 

🔥
🛡️குழந்தைகளின் மனநல பயிற்சி தொடர்பான பயிற்சி ( Child Psychology ) பெற்று , பட்டதாரி கல்வித் தகுதியுடன் , இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை   சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் சான்றொப்பதுடன் அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவு 

🔥
🛡️தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பள்ளிகளே திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் . வாங்க ஆர்வமில்லாததால் தேங்கிக்கிடக்கின்றன. 
பயன் இல்லாத திட்டம் என கல்வியாளர்கள் வேதனை 

🔥
🛡️செய்முறை தேர்வில் பங்கேற்ற 12-ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு  நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 23ம் தேதிக்குப் பின் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.  அதே நேரம் வரும் 30ஆம் தேதி வரை பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் - நாளிதழ் செய்தி 

🔥
🛡️புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் குரூப்-'பி', மற்றும் 'சி' பிரிவு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡️இரண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' பாடங்கள், நேற்று  முதல், கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன. 

🔥
🛡️பள்ளிக்கு சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் குறித்த, விபரங்களை திரட்ட, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான பணிகளை, தற்போதே துவங்குமாறு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 

🔥
🛡️10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை

🔥
🛡️கொரோனா பரவலால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடக்கும் என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

🔥
🛡️தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 

🔥
🛡️பொதுப்பணிகள் - கருவூலம் மற்றும் கணக்குத்துறை - கருவூல அலகு IFHRMS திட்டம்  01.06.2020 முதல் நடைமுறைப்படுத்தியது முதன்மைச் செயலர் / ஆணையர், கருவூவம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் கானொளி காட்சி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது e-SR தொடர்பான பணிகளை உடன் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கியது - தொடர்பாக செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post