Title of the document
  *💫கல்விச்செய்திகள்🗞️*
*⚜️2052 சித்திரை 09 ~ 22.04.2021⚜️* 

🔥
🛡️ 10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் கிடையாது. தேர்வு உள்ளதாக வெளியாகும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்

🔥
🛡️ஆசிரியர்களுக்கு கொரோனா பரவுகிறது ! பீதியில் ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி 

🔥
🛡️ஹரியானா மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் மே 31 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஹரியானா  அரசு அறிவித்துள்ளது 

🔥
🛡️கரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வருவதால் ஆசிரியர்கள் வீட்டில் இருந்து இணைய வழியில் பணியாற்றிட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை 

🔥
🛡️பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களின் அறிவுரையின்படி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக இணைப்பு பயிற்சி கட்டகம் மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சிப் புத்தகம் காணொளி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பரப்படும் நிகழ்ச்சியை  அனைத்து மாணவர்களும்  பார்த்து பயன் பெறுவதை உறுதி செய்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் இப்பொருள் சார்பாக எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை விவர அறிக்கை அனுப்புமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு 

🔥
🛡️ TNPSC-தேர்வு விடைத்தாள் கணினி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் & கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகலை பெற்றுக் கொள்ளலாம் என TNPSC அறிவிப்பு 

🔥
🛡️மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது 

🔥
🛡️மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post