*💫கல்விச்செய்திகள்🗞️*
*⚜️2052 சித்திரை 08 ~ 21.04.2021⚜️*
🔥
🛡️இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகம் ( Bridge Course ) மற்றும் பயிற்சி புத்தகம் ( Work Book ) காணொலிகள் தயாரித்து கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் சார்ந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡️ஜூலை மாதத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடித்து விட தமிழக அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது
🔥
🛡️ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 10 வகுப்பு தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும் இவர்களுக்கு இணையதள முறைவில் விரைவில் 11ஆம் வகுப்பு பாடங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
🔥
🛡️கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யுஜிசி நெட் தேர்வுகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது
🔥
🛡️கூடலூர் கல்வி மாவட்டம் பழங்குடியின மாணவர் அரசு உதவித் தொகையில் கையாடல் செய்ததாக 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் - நாளிதழ் செய்தி
🔥
🛡️தமிழகத்தில் கல்வித்துறை உத்தரவின்றி வாய்மொழி உத்தரவு மற்றும் வாட்ஸ் ஆப் தகவல் அடிப்படையில் ஆசிரியர்களை பள்ளிக்கு வரச் சொல்லி கொரோனா தொற்றுக்கு ஆளாக்கும் அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது - நாளிதழ் செய்தி
🔥
🛡️ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வு கட்டாயமில்லை என்று கூறியுள்ளது.
🔥
🛡️அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள், தேர்வுகள் - தமிழக அரசு உத்தரவு
🔥
🛡️ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வீட்டில் வைத்து தேர்வு நடத்த, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment