Title of the document

Today Tamil News | Today Tamil News Head Lines | Tamil Breaking News


இன்றைய செய்திகள்
8.02.2021(திங்கட்கிழமை)
🌹வலிய வந்ததை விரட்டி விடுவதும் 
கிடைக்காத ஒன்றைத் தேடித் திரிவதும் தான் 
இந்த உலகில் பலரின் அறியாமையாகும்.!
🌹🌹தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை
விட 
தவறை சுட்டிக்காட்டி விட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்.!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📕📘திருச்சியில்  நடைபெற்ற ஜாக்டோ- ஜியோ கூட்ட முடிவின் அடிப்படையில் 
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 20 பேர் மட்டும் சென்னையில் இன்று
8-02-2021முதல் 9-02-2021, 10-02-2021 ஆகிய மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம்( 72 மணி நேரம்)
8-02-2021, 09-02-2021,10-02-2021 ஆகிய மூன்று நாட்களும் அந்தந்த மாவட்டங்களில் சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாநில பொறுப்பாளர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
📕📘9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு இன்று பள்ளிகள் திறக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி                                                                                    
 📕📘ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன்                                                        
📕📘அரசு பள்ளி மாணவருக்கு ஷூ : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்                                                                               
📕📘சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டண விபரங்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
📕📘6157 ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர் தற்காலிக பணியிடங்கள் - இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு.
📕📘 தமிழகத்தில் 10 ஆண்டுகளில் புதிதாக 273 பள்ளிகள் தொடக்கம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
📕📘பிஎஸ்.சி. நா்சிங், பி.ஃபாா்ம். உள்ளிட்ட17 படிப்புகளுக்கு இணையவழி கலந்தாய்வு வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
📕📘அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்; நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆதிதிராவிடர் நல ஆணையரகம் அறிவிப்பு
📕📘அலுவலக பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு -ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவிப்பு
📕📘அலுவலக பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் வழங்கினார்.
📕📘6 முதல் 8-ம் வகுப்பு வரை 3 லட்சம் மாணவர்களுக்கு ‘டேப்லெட்’- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
📕📘இன்று பிப்.,8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு, பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை. 
📕📘2018-19-ல் உயர்நிலை பள்ளிப்படிப்பில் மாணவிகள் இடைநிற்றல் சராசரியாக 17%:  மத்திய மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல் 
📕📘அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஆதிதிராவிடர் நல ஆணையரகம் அறிவித்துள்ளது. 
📕📘பணி நிரந்தரம் வழங்கக் கோரி, பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
📕📘அரியர் மாணவர்களுக்கான பொறியியல் தேர்வுக் கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
📕📘பாடதிட்ட தயாரிப்பு குழுவின் ஒத்துழைப்போடு மினிமம் மெட்டீரியல் வழங்க எதிர்பார்ப்பு 
📕📘2017- 2018 கல்வி ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கக்கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு 
📕📘முதல்முறை விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு விரைவு தபால் மூலம் வீட்டிற்கே இலவசமாக அடையாள அட்டை: தபால் துறையுடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம்                                                                                    
📕📘உத்தரகாண்ட் - பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இரங்கல்.
இந்தியாவுடன் பிரான்ஸ் துணை நிற்பதாக அதிபர் மேக்ரான் ட்வீட்.
📕📘சசிகலா தங்கியுள்ள விடுதி முன்பு தமிழில் வைக்கப்பட்ட பேனர்களை கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கினர்.
கர்நாடக மாநிலம் நந்தி மலைப்பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் சசிகலாவை வரவேற்று அங்கு வைக்கப்பட்ட பதாகைகள் கிழிப்பு
கிழிக்கப்பட்ட பதாகைகளை காவல்துறையினர் அகற்றினர்.
📕📘ஆட்சியின் கடைசி நேரம் வரை நாடகமாடி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சி இன்னும் 3 மாதத்தில் முடிய போகிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவசாயிகள் படும் துன்பம் எல்லாம் இப்போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
📕📘சசிகலா அதிமுக அலுவலகத்தில் நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களை அதிமுகவில் இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
📕📘சசிகலாவுக்கு உற்ச்சாக வரவேற்பு அளிப்பது மட்டுமே எங்கள் நோக்கம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகன் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி நடப்பதக்க பெங்களுருவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டி.டி.வி.தினகன் கூறியுள்ளார்.
📕📘சசிகலா தலைமையேற்று, செயல்பட்டால்தான் அதிமுக தழைக்கும் என்ற  நம்பிக்கையில் தொண்டர்கள் அவரை வரவேற்க தயாராகிவிட்டனர்.
தீய சக்தி மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒற்றுமையுடன் ஒன்றுப்பட்டு, சசிகலாவின் தலைமையை ஏற்கவேண்டும் என
நமது எம்.ஜி.ஆர் செய்தி
📕📘சசிகலா வருகையையொட்டி அ.ம.மு.க வினர் மட்டுமல்ல எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பேனர் வைக்கும் அதிகாரம் இல்லை. விதி மீறலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சசிகலா வருகையை முன்னிட்டு அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் 
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
📕📘மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 75 வது நாளாக தொடர்கிறது.
📕📘சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சசிகலா இன்று தமிழகம் வருவதை ஒட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
📕📘இந்தியாவில் தயாரிக்கப்படும் COVISHIELD தடுப்பூசி தென்னாப்பிரிக்க வகை தொற்றுக்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டுள்ளதாக ஆய்வில் தகவல்.
அங்கு லேசான/மிதமான அறிகுறி உள்ளவர்களுக்கு எதிராக முழுமையான தீர்வை தருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📕📘அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் பாதுகாப்பு அதிகரிப்பு.
ஆங்காங்கே புதிதாக சி.சி.டிவி. கேமிராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரம். 
புதிதாக பேரிகார்டுகள் குவிப்பு.
📕📘மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரமாண்ட மாநாடு பிப்ரவரி 21ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது 
- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு
📕📘தமிழக எல்லையில் இருந்து சசிகலா தங்கவிருக்கும் தி.நகர் இல்லம் வரை 32 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்க திட்டம்
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சசிகலாவிற்கு வரவேற்பு அளிக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல்.
📕📘கட்சியை பார்த்து கடனை தள்ளுபடி செய்யவில்லை, விவசாயிகளின் கஷ்டத்தை பார்த்துதான் கடனை தள்ளுபடி செய்தேன் - முதல்வர் பழனிசாமி
📕📘சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம், இல்லை என்றால் தனித்து போட்டி 
- பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர்
📕📘இன்றைய பிரச்சாரம் ரத்து
வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம்  செய்யப்பட்டுள்ளது.
📕📘கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தி கொண்டே போகிறது மத்திய அரசு
- ஸ்டாலின்
📕📘சென்னையிலுள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசின் சொத்து என உரிமை மாற்றம் செய்யப்படுகிறது. உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பின்படி அரசுடைமை 
- சென்னை ஆட்சியர்                                                                                               
📕📘சென்னையில் சசிகலாவுக்கு வரவேற்பளிக்க காவல்துறை அனுமதி; ராணுவ கட்டுப்பாடுடன் தொண்டர்கள் நடந்து கொள்ள வேண்டும் என டிடிவி.தினகரன் அறிவுறுத்தல்.
📕📘இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருக்க, ஊரடங்கை முன்னதாக அமல்படுத்தியதே காரணம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்.
📕📘தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில், நிறைய மாற்றங்கள் நிகழும், நெல்லை தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரூடம்.
📕📘சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் அதிக எண்ணிக்கையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
📕📘உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெடிராஸ் அதனோம் கெப்ரியாசிஸ் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், உற்பத்தியை கணிசமாக உயர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
📕📘இந்தியா மற்றும் சீனா எல்லைப் பிரச்சினை தீரும் வரை இரு நாடுகளுக்கு இடையில் பேச்சு வார்த்தை தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
📕📘அமெரிக்காவில் வெளிநாட்டினா் தங்கிப் பணியாற்றுவதற்கான 'ஹெச்-1பி' வகை நுழைவு இசைவுகளை (விசா) மீண்டும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் அதிபா் ஜோ பைடனின் முடிவுக்கு குடியரசுக் கட்சியைச் சோந்த எம்.பி. தாமஸ் காட்டன் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
📕📘அமெரிக்காவின் மற்ற முன்னாள் அதிபா்களுக்கு அளிக்கப்படுவதைப் போல், டொனால்ட் டிரம்ப்புக்கு ரகசிய உளவுத் தகவல்களை அளிக்கத் தேவையில்லை என்று அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் அதிரடியாகத் தெரிவித்துள்ளாா்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post