Title of the document
ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) ( ( Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations ) 

ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு 

மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு . மு.க. ஸ்டாலின் பங்கேற்பு 

28.02.2021 ஞாயிற்றுக்கிழமை ராமலெட்சுமி பாரடைஸ் 174 , ஜி.என்.டி. சாலை , மாதவரம் , சென்னை  | 

அன்புள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களே , உயர்மட்டக்குழு உறுப்பினர்களே வணக்கம் . முடிவின் கடந்த 13.02.2021 அன்று திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் - உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்ட அடிப்படையில் , எதிர்வரும் 28.02.2021 ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஜாக்டோ ஜியோ மாநில மாநாட்டினை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது . பழைய ஓய்வூதியத் திட்டத்தினை பெற்றிடவும் வரையறுக்கப்பட்ட ஊதியத்தினை பெற்றிடவும் ஊதிய முரண்பாடுகளையும் அநீதிகளையும் களைந்திடவும் தொடர்ந்து ஜாக்டோ ஜியோவுடன் இணைந்து ஆதரவினை நல்கிவரும் மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு . மு.க. ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் , அரசு ஊழியர் பணியாளர் நலன் காக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள இசைவு அளித்துள்ளனர் . தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு திருப்புமுனையினை நிகழ்த்தவுள்ள ஜாக்டோ ஜியோ மாநில மாநாட்டில் , ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு , கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக உரிமைகளுக்காகப் போராடி வரும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலமாக கோரிக்கைகளை வென்றெடுக்க சென்னையினை நோக்கி அணி திரள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .


 ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இன்று 23.02.2021 செவ்வாய்க்கிழமை உயர்மட்டக்குழுத் தலைவர்களை அழைத்து மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி , மாநில மாநாட்டினை எழுச்சியுடன் நடத்திடவும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களை மாநாட்டிற்கு அழைத்து வருவதற்கான முன்னேற்பாட்டினை திட்டமிடவும் கேட்டுக் கொள்கிறோம் . மேலும் , மாநில மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் எதிர்வரும் 25.02.2021 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு நடைபெறும் அரங்கத்தில் நடைபெறும் . இதில் அனைத்து உயர்மட்டக் குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் . உயர்மட்டக்குழுக் கூட்டத்திற்கு வரும்போது , உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே கடந்த 13.02.2021 அன்று திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்ட முடிவின் அடிப்படையில் , உயர்மட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் சங்கத்தின் சார்பாக மாநில மாநாட்டு நிதியாக ரூ .20,000 / - தவறாமல் செலுத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

 இவண்

 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ ஜியோ பெறுநர் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post