Title of the document

Mattu Pongal Wishes,Greetings, Kavithaigal, Images, kolangal in Tamil 

மாட்டுப் பொங்கல் தேதி / Mattu Pongal Date :

 இந்த ஆண்டு Mattu Pongal 16 January 2021 அன்று தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த மாட்டுப் பொங்கலானது மாட்டுப் பொங்கல், பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது 


மாட்டுப் பொங்களின் வரலாறு / History Of Mattu Pongal :

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
 தொழுதுண்டு பின்செல் பவர

                                                    - திருவள்ளுவர்                                                            

அத்தகையஉழவுக்குப் பயன்படும் மாடுகளுக்காக மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது

 மாட்டுப் பொங்கல் எவ்வாறு கொண்டாடப்படுகிறது ? :

 தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை மாட்டுப் பொங்கல் ஆகும். மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது முதல் நாளன்று தைப்பொங்கல் மாட்டுப்பொங்கல் மூன்றாம் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது மரியாதை செலுத்தும் விதமாக தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை மாட்டுப் பொங்கல் ஆகும்.

  •  அன்றைய தினம் வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக காலையிலேயே 
  • பசுக்களையும் காளைகளையும் குளிப்பாட்டி கழுத்தில் அணிவித்து மாலை அணிவித்து, 
  • அவற்றின் கும்பல் சீவி கலர் கலர் வண்ணங்கள் பூசப்பட்டு கொம்புகள் பல நிறங்கள் அதன் பசுக்களும் காளைகளும் இடங்களிலும் பூசப்பட்டு, 
  • பொங்கல் பானையில் பச்சை அரிசியும், பசும் பாலும், வெல்லமும் கலந்து பொங்கல் செய்து கடவுளுக்கு சமர்ப்பித்து,
  •  வீட்டில் உள்ளோரும் பசுக்களுக்கும் உணவுகள் பிரிக்கப்பட்டு, அன்றைய தினம் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு அன்றைய தினம் மிகவும் சிறப்பாக செய்யப்படுகின்றன. 

மாட்டுப் பொங்கல் கொண்டாடும் முறை :

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

 

இதையும் படிங்க :- Simple mattu pongal kolam 2021 வீடியோ காண இங்கே கிளிக் செய்யுங்கள்
 


உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
      
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். 

மாட்டுப் பொங்கல் கவிதைகள் / Mattu Pongal Kavithaigal :

 மாட்டுப் பொங்கல் கவிதை - Mattu Pongal Kavithai

     "வீரத்தின் அடையாளமாய் ,
    தமிழரின் திருநாளாய் ,
    விவசாயத்தின் தோழனாய் ,
    ஏழைகளின் தெய்வமாய் ,
    உழவனின் தொண்டனாய் ,
    விளங்கும் பசு மற்றும் மாட்டின்
    பண்டிகையாம் மாட்டு பொங்கல் ...!!
    அலங்காரங்களுகிடையே கம்பீர நடைகொண்டு ,
    மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!"

 
 மாட்டுப் பொங்கல் வாழ்த்து கவிதை :

மனிதனுக்கு பால் கொடுத்து
மனிதனுக்கு தோள் கொடுத்து
இல்லை இல்லை
மனிதனுக்கு தன்னையே கொடுத்து
மாண்டு போவது மாடு...!
மாடு போற்றும் ஒரு நாள்
மணிகள் கட்டி வண்ணமிட்டு
போற்றுவோம் இந்த உறவு நண்பர்களை ..
 
 
மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் :
 
மனித நேயம் உள்ளவரை நம் பாரம்பரியம் மாறாதே, 
தமிழரின் பாரம்பரியம் மாறாதே, 
அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் !
 

 Mattu Pongal Wishes Images 2021 :

 


 

மாட்டுப் பொங்கல் கோலங்கள் Pongal kolangal 2021 :

மாட்டுப் பொங்கல் தினத்தன்று பெண்கள் தங்களின் வீடுகளின் முன்பு மாடுபோல் கோலம் வரைந்து மகிழ்வர். அதற்காக கீழே சில மாடுகளின் கோலங்கள் கொடுத்துள்ளோம். நீங்களும் உங்களின் வீடுகளின் முன்பு மாடு கோலங்கள் வரைந்து மகிழ்ச்சியாக மாட்டுப் பொங்கல் பண்டிகையை கொண்டாடுங்கள்.
 

 
 
 
 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post